நுவரெலியா தேர்தல் மாவட்டம்
நுவரெலியா தேர்தல் மாவட்டம் (Nuwara Eliya Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் நுவரெலியா நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 ஆண்டு தேர்தலில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் 457,137 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[1].
நுவரெலியா இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | மத்திய மாகாணம் |
நிருவாக மாவட்டங்கள் | நுவரெலியா மாவட்டம் |
தேர்தல் தொகுதிகள் | 4 |
வாக்காளர்கள் | 457,137[1] (2010) |
மக்கள்தொகை | 749,000[2] (2008) |
பரப்பளவு | 1,741 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை | 7 |
உறுப்பினர்கள் | பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கம் நவீன் திசாநாயக்க, ஐமசுகூ சிறீ ரங்கா ஜெயரத்தினம், ஐதேமு வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஐமசுகூ பெருமாள் ராஜதுரை, ஐமசுகூ சி. பி. ரத்நாயக்கா, ஐமசுகூ ஆறுமுகன் தொண்டமான், ஐமசுகூ |
தேர்தல் தொகுதிகள்
நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
- நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதி
- வலப்பனை தேர்தல் தொகுதி
- கொத்மலை தேர்தல் தொகுதி
- அகுரன்கெத்தை தேர்தல் தொகுதி
மேற்கோள்கள்
- "Presidential Election - 2010 Nuwara-Eliya District". இலங்கைத் தெர்தல் திணைக்களம்.
- "Estimated mid year population by district, 2004 – 2008". Statistical Abstract 2009. இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம்.
- "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2009. இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.