இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்

இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் (Electoral districts in Sri Lanka) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி இலங்கை நாடாளுமன்றத்திற்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நோக்கங்களுக்காக மட்டும் அமைக்கப்பட்ட அலகுகள் ஆகும். இதனடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை 160 வாக்கெடுப்புப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது.

இரண்டு தேர்தல் மாவட்டங்களைத் தவிர மீதமான 20 தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் நிருவாக மாவட்டத்தின் பெயர்களையே தாங்கியுள்ளன. மாறாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிருவாக மாவட்டங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. அதே போல், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னித் தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

இந்த 22 புதிய தேர்தல் மாவட்டங்களிலும் முதற்தடவையாக 1989 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

உறுப்பினர்கள்

இலங்கை அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் (ஆசனம்) கொண்டிருக்க வேண்டும்:[1]

  • மாகாண அடிப்படையில், ஒவ்வொரு மாகாணத்திற்கும் 4 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் (பகுதி 96(4)) 36 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.[2] ஒவ்வொரு மாகாணத்திற்குமான உறுப்பினர்கள் குறிப்பிட்ட மாகானத்துக்குள் அடங்கிய தேர்தல் மாவட்டங்களுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டு அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவார்கள்.[2]
  • அனைத்துத் தேர்தல் மாவட்டங்களுக்கும் மொத்தம் 160 இடங்கள் (பகுதி 98) ஒதுக்கப்பட்டுள்ளன.[3] தேர்தல் ஆணையம் ஆண்டு தோறும் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும்.
  • 29 இடங்கள் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவார்கள் (பகுதி 99A).[4]

தொகுதிச் சீரமைப்பு ஆணையம்

தேர்தல் மாவட்டச் சீரமைப்புக்காகவும், 36 மாகாண இருக்கைகளை நிர்ணயிப்பதற்காகவும் அரசியலமைப்பின் படி தொகுதிச் சீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) ஒன்று அமைக்கப்பட்டது.[2][5] தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை 20 முதல் 25 வரை இருக்கலாம் என அரசியலமைப்பு வரையறுத்தது.[2]

1978 நவம்பர் 29 இல் தொகுதிச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டது. இதன் முடிவுகள் 1981 சனவரு 15 இல் வெளியிடப்பட்டன. இதன் படி இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களின் பெயர்கள் அந்தந்த நிருவாக மாவட்டங்களின் பெயர்களை எடுத்துக் கொண்டன. நிருவாக மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, வவுனியா புதிதாக அமைக்கப்பட்ட வன்னி தேர்தல் மாவட்டமாக இணைக்கப்பட்டன. 36 மாகாண இருக்கைகளும் பின்வருமாறு மாகாணவாரியாகப் பிரிக்கப்பட்டன:

1984 பெப்ரவரியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து கிளிநொச்சி மாவட்டம் என்ற புதிய நிருவாக மாவட்டம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த இரு நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.

மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

தற்போதைய உறுப்பினர்கள்

தேர்தல் மாவட்ட அடிப்படையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை:

தேர்தல்
மாவட்டம்
மாகாணம் பரப்பளவு
கிமீ2
[6]
தேர்தல்
தொகுதிகள்
மக்கள்தொகை
(2012)
[7]
பதிவு செய்யப்பட்ட
வாக்காளர்கள்
(2011)[8]
பகுதி.98
உறுப்பினர்கள்
(2011)
பகுதி.96(4)
உறுப்பினர்கள்
(1979)
மொத்த
உறுப்பினர்கள்
(2011)[9]
அம்பாறைகிழக்கு மாகாணம்4,4154645,803441,287527
அனுராதபுரம்வடமத்திய மாகாணம்7,1797855,373606,508729
பதுளைஊவா மாகாணம்2,8619811,138591,292729
மட்டக்களப்புகிழக்கு மாகாணம்2,8543525,166347,099415
கொழும்புமேல் மாகாணம்699152,322,9421,512,67017219
காலிதென் மாகாணம்1,652101,058,902790,2079110
கம்பகாமேல் மாகாணம்1,387132,298,1901,538,36817118
அம்பாந்தோட்டைதென் மாகாணம்2,6094595,802442,060527
யாழ்ப்பாணம்வட மாகாணம்2,30411695,867482,342516
களுத்துறைமேல் மாகாணம்1,59881,214,720853,6099110
கண்டிமத்திய மாகாணம்1,940131,367,9001,002,49311112
கேகாலைசபரகமுவா மாகாணம்1,6939837,100631,981729
குருநாகல்வடமேல் மாகாணம்4,816141,611,2301,216,28614216
மாத்தளைமத்திய மாகாணம்1,9934482,294359,796415
மாத்தறைதென் மாகாணம்1,2837810,629595,867718
மொனராகலைஊவா மாகாணம்5,6393448,080319,557426
நுவரெலியாமத்திய மாகாணம்1,7414706,156488,133527
பொலன்னறுவைவடமத்திய மாகாணம்3,2933403,827294,365325
புத்தளம்வடமேல் மாகாணம்3,0725760,651517,557628
இரத்தினபுரிசபரகமுவா மாகாணம்3,27581,082,051769,8149211
திருகோணமலைகிழக்கு மாகாணம்2,7273376,337245,363314
வன்னிவட மாகாணம்6,5803364,021221,409235
தேசியப் பட்டியல்29
மொத்தம்65,61016020,274,17914,268,06316036225

ஆண்டுகள் வாரியாக இட ஒதுக்கீடு

தேர்தல் மாவட்டங்களுக்கு ஆண்டுகள் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்.[10][11]

ஆண்டுதேர்தல் மாவட்டம்மொத்தம்
அம்அனுபதுமட்கொழுகாலிகம்அம்பாந்யாழ்களுகண்கேகாகுருமொனமா-ளைமா-றைநுவபொலபுத்இரதிருவன்
2011வாக்காளர்கள்[8]441,287606,508591,292347,0991,512,670790,2071,538,368442,060482,342853,6091,002,493631,9811,216,286319,557359,796595,867488,133294,365517,557769,814245,363221,40914,268,063
பிரிவு 98 இடங்கள்57741791755911714447536932160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[9]79951910187610129166587581145196
2010வாக்காளர்கள்436,148598,274590,341344,7501,542,491784,5301,529,563438,202484,791845,626997,807629,6691,209,323315,452354,112593,778482,550290,494509,714761,336246,890236,44914,222,290
பிரிவு 98 இடங்கள்57741791755911714347536933160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[12]79951910187610129165587581146196
2009வாக்காளர்கள்426,109585,934581,971335,8821,503,310770,5701,497,814428,636816,005826,921976,789620,0901,193,228308,230345,104584,800467,103284,279500,751746,029245,155270,70714,315,417
பிரிவு 98 இடங்கள்57641791759911713346536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[13]798519101871010129155577581046196
2008வாக்காளர்கள்420,835579,261574,814333,6441,521,854761,8151,474,464421,186721,359813,233970,456613,9381,183,649300,642342,684578,858457,137280,337495,575734,651241,133266,97514,088,500
பிரிவு 98 இடங்கள்57641791758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[14]79851910187910129155587581046196
2007வாக்காளர்கள்414,523569,417561,021331,2691,560,593753,1721,458,295414,112716,435801,326955,108605,6261,171,881294,761338,946576,208452,395277,056489,852713,205240,632262,53913,958,372
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[15]78852010187910129155587581046196
2006வாக்காளர்கள்409,308558,413554,026330,9501,543,282747,1901,430,679408,240710,174788,606940,923599,4351,160,274288,650334,680573,833450,390272,634484,076701,379242,463259,11313,788,718
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[16]78852010187910129155587581046196
2005வாக்காளர்கள்399,395547,303541,331324,3871,502,967736,8131,397,358401,540707,309772,999923,017589,6761,140,125282,724328,938568,125449,539266,652476,781684,529242,112254,75113,538,371
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[17]78852010187910129155587581046196
2004வாக்காளர்கள்396,453536,808533,163318,7281,468,537732,2891,364,180396,595701,938764,305907,038583,2821,124,076276,109321,876562,987447,225263,609470,604668,217238,755250,38613,327,160
பிரிவு 98 இடங்கள்56641891658911714347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[18]78852010177910129165587581046196
2003வாக்காளர்கள்387,512523,485518,958310,1721,450,845723,0801,339,715389,998651,361753,327891,356574,9171,104,895268,517316,847555,929439,861259,039460,084655,248229,315229,53513,033,996
பிரிவு 98 இடங்கள்56641891658911714347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்[19]78852010177910129165587581046196
2002வாக்காளர்கள்379,044514,149511,115303,9281,467,751716,6081,327,145384,361644,279746,138880,632570,2991,089,482262,742312,556550,503436,236254,061450,057647,035224,307226,60412,899,032
பிரிவு 98 இடங்கள்56641891658911714347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010177910129165587581046196
2001வாக்காளர்கள்369,427500,673500,738291,7301,461,334708,4301,305,582377,428637,066732,798863,019562,1231,069,619254,802305,698543,205424,513247,513440,768634,843217,572225,00712,673,888
பிரிவு 98 இடங்கள்56641891658911714347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010177910129165587581046196
2000வாக்காளர்கள்360,497489,776491,288282,0791,440,682698,5581,285,973369,073633,457717,764838,687554,6981,046,102247,280299,606534,694417,264240,444426,193623,506212,280218,86112,428,762
பிரிவு 98 இடங்கள்56641991758911713347535833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852110187910129155587571046196
1999வாக்காளர்கள்352,537472,661475,558275,4851,385,547678,5091,253,416360,026622,331697,656812,478545,2381,007,410237,935292,652524,651405,414229,434412,474609,655206,884213,11112,071,062
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010187910129155587581046196
1998வாக்காளர்கள்343,809459,534464,223270,1971,337,083660,5851,228,908350,809612,770682,723794,453534,980980,725230,576286,174515,847397,711220,903404,050595,791201,808205,54111,779,200
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010187910129155587581046196
1997வாக்காளர்கள்336,165448,098454,913268,2001,326,487652,7341,213,589342,347622,957676,963780,136528,107961,240224,077281,089510,310391,585217,318398,055584,998197,620202,10811,619,096
பிரிவு 98 இடங்கள்56641891759911713347535833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்788520101871010129155587571046196
1996வாக்காளர்கள்329,929436,002449,901269,9061,305,511642,9901,196,445336,158596,639675,528766,300520,720938,583217,508275,882503,602388,455213,174393,318574,591195,867196,12811,423,137
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010187910129155587581046196
1995வாக்காளர்கள்327,824429,790447,187269,3851,296,243640,0651,187,657335,273596,373669,224752,817515,976921,601210,972270,920503,039388,114209,546391,053568,481195,897184,70811,312,145
பிரிவு 98 இடங்கள்56641891758911713347536833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010187910129155587581046196
1994வாக்காளர்கள்325,566411,899445,298267,4631,299,879641,3601,185,288332,541596,373665,135744,055508,691901,027202,889263,700504,676390,335204,631388,335561,186191,722181,23211,213,281
பிரிவு 98 இடங்கள்56641891758911713347635833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்78852010187910129155588571046196
1993வாக்காளர்கள்312,006406,926435,260261,8981,235,959632,4221,140,808326,913596,366646,199726,192500,947876,591199,391259,271503,470386,668200,192380,192554,607184,090178,69710,945,065
பிரிவு 98 இடங்கள்46641891759911713347635833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்688520101871010129155588571046196
1992வாக்காளர்கள்315,101398,936433,862254,0571,263,667622,1271,116,072323,653596,413639,275719,289494,706858,638200,601255,493493,503367,189196,031371,192546,992181,168174,17710,822,142
பிரிவு 98 இடங்கள்56641991659911713347535833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்788521101771010129155587571046196
1991வாக்காளர்கள்308,086389,052430,752243,6591,255,273619,8801,101,017321,252596,413634,383708,758489,914864,279194,956251,484487,807363,291196,255362,255538,308177,830166,86010,701,764
பிரிவு 98 இடங்கள்56641991659911713347535833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்788521101771010129155587571046196
1990வாக்காளர்கள்294,088369,468417,274229,2441,190,630606,6111,057,474314,304596,410611,288694,516478,144847,524186,614244,473476,841342,786184,366349,068517,784166,367166,03110,341,305
பிரிவு 98 இடங்கள்566418916591011713347535833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்788520101771011129155587571046196
1989வாக்காளர்கள்289,668360,811397,323229,2441,177,720599,5041,033,334308,109596,410601,756682,807469,209823,261179,408236,115467,338336,815177,700341,856505,097160,093166,19310,139,771
பிரிவு 98 இடங்கள்56641991659911713347535833160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்788521101771010129155587571046196
1988வாக்காளர்கள்271,792349,888385,865216,4201,158,088585,1811,009,845301,015592,210588,439669,276463,476811,373175,029226,866458,005308,953171,260331,893499,486155,548141,4489,871,356
பிரிவு 98 இடங்கள்4663199165101011813347535832160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்6884211017711111210155587571045196
1987வாக்காளர்கள்265,951334,063329,464217,2761,088,640571,109969,634295,181591,074570,194628,373437,171784,989161,927214,939451,926229,510163,745318,755457,225152,289141,4459,374,880
பிரிவு 98 இடங்கள்46641810165101011713348435832160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்688520111771111129155596571045196
1986வாக்காளர்கள்255,783324,317319,127209,9261,060,813560,709943,343284,948580,798554,855612,723423,246762,468153,477211,351443,821220,675159,265308,215447,426149,916135,0659,122,267
பிரிவு 98 இடங்கள்46541910165101011713348435832160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
Total Seats687521111771111129155596571045196
1985வாக்காளர்கள்248,179315,911313,697205,1221,060,830555,527923,981277,084569,743548,186618,817439,753738,892154,896206,461439,469215,560154,391298,893449,178149,495132,5939,016,658
பிரிவு 98 இடங்கள்45541910165101011813348435832160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்6775211117711111210155596571045196
1984வாக்காளர்கள்238,647308,332306,111196,9651,047,904552,856910,981269,298555,302540,316609,248436,052730,696152,136203,025432,689215,910148,853294,358440,731148,064132,0818,870,555
பிரிவு 98 இடங்கள்46531910165101011813348435832160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்6874211117711111210155596571045196
1979வாக்காளர்கள்185,286245,950255,749157,765911,251483,005778,344222,040463,414469,501530,517386,962670,230111,405175,225380,107187,101112,411243,581375,005119,872108,4937,573,214
பிரிவு 98 இடங்கள்45631910175101011814248425832160
பிரிவு 96(4) இடங்கள்222121121112221122221336
மொத்த இடங்கள்6784211118711111210164596471045196

தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்

கொழும்பு

  1. கொழும்பு - வடக்கு
  2. கொழும்பு - மத்தி
  3. பொரளை
  4. கொழும்பு - கிழக்கு
  5. கொழும்பு - மேற்கு
  6. தெகிவளை
  7. இரத்மலானை
  8. கொலன்னாவ
  9. கோட்டை
  10. கடுவலை
  11. அவிசாவளை
  12. ஹோமாகமை
  13. மகரகமை
  14. கெஸ்பாவ
  15. மொரட்டுவை

கம்பகா

  1. வத்தளை
  2. நீர்கொழும்பு
  3. கட்டானை
  4. திவுலப்பிட்டியா
  5. மீரிகமை
  6. மினூவாங்கொடை
  7. அத்தனகலை
  8. கம்பஹா
  9. யா-எலை
  10. மகரை
  11. தொம்பே
  12. பியகமை
  13. களனி

கண்டி

  1. கலகெதரை
  2. ஹாரிஸ்பத்துவை
  3. பாததும்பறை
  4. உடதும்பறை
  5. தெல்தெனியா
  6. குண்டசாலை
  7. ஹேவாஹெட்ட
  8. செங்கடகலை
  9. கண்டி
  10. யட்டிநுவரை
  11. உடுநுவரை
  12. கம்பளை
  13. நாவலப்பிட்டி

மாத்தளை

  1. தம்புள்ளை
  2. லக்கலை
  3. மாத்தளை
  4. இரத்தோட்டை

நுவரெலியா

  1. மஸ்கெலியா
  2. கொத்மலை
  3. ஹங்குரன்கெத்தை
  4. வலபனை

திருகோணமலை

  1. சேருவிலை
  2. திருகோணமலை
  3. மூதூர்

காலி

  1. பலபிட்டி
  2. அம்பலாங்கொடை
  3. கரந்தேனியா
  4. பெந்தரை-எல்பிட்டியா
  5. கினிதுமை
  6. பத்தேகமை
  7. இரத்கமை
  8. காலி
  9. அக்மீமனை
  10. ஹபராதுவை

மாத்தறை

  1. தெனியாயை
  2. ஹக்மனை
  3. அக்குரஸ்ஸை
  4. கம்புருபிட்டியை
  5. தெவிநுவரை
  6. மாத்தறை
  7. வெலிகாமம்

அம்பாந்தோட்டை

  1. முல்கிரிகலை
  2. பெலியத்தை
  3. தங்காலை
  4. திஸ்ஸமகராமை

களுத்துறை

  1. பாணந்துறை
  2. பண்டாரகமை
  3. ஹொரனை
  4. புளத்சிங்களை
  5. மத்துகமை
  6. களுத்துறை
  7. பேருவளை
  8. அகலவத்தை

யாழ்ப்பாணம்

  1. ஊர்காவற்துறை
  2. வட்டுக்கோட்டை
  3. காங்கேசன்துறை
  4. மானிப்பாய்
  5. கோப்பாய்
  6. உடுப்பிட்டி
  7. பருத்தித்துறை
  8. சாவகச்சேரி
  9. நல்லூர்
  10. யாழ்ப்பாணம்
  11. கிளிநொச்சி

வன்னி

  1. வவுனியா
  2. மன்னார்
  3. முல்லைத்தீவு

மட்டக்களப்பு

  1. கல்குடா
  2. மட்டக்களப்பு
  3. பட்டிருப்பு

திகாமடுல்லை

  1. அம்பாறை
  2. சம்மாந்துறை
  3. கல்முனை
  4. பொத்துவில்

குருநாகல்

  1. கல்கமுவை
  2. நிக்கவரட்டிய
  3. யாப்பகுவை
  4. கிரியாலை
  5. வாரியபொலை
  6. பண்டுவஸ்நுவரை
  7. பிங்கிரியை
  8. கட்டுகம்பொலை
  9. குளியாப்பிட்டி
  10. தம்பதெனியா
  11. பொல்காவலை
  12. குருநாகல்
  13. மாவதகமை
  14. தொடன்கஸ்லந்தை

புத்தளம்

  1. புத்தளம்
  2. ஆனைமடுவை
  3. சிலாபம்
  4. நாத்தாண்டியா
  5. வென்னப்புவை

அனுராதபுரம்

  1. மதவாச்சி
  2. ஹொரவபொத்தானை
  3. அனுராதபுரம் - கிழக்கு
  4. அனுராதபுரம் - மேற்கு
  5. கலாவெவை
  6. மிகிந்தலை
  7. கெக்கிராவை

பொலன்னறுவை

  1. மின்னேரியா
  2. மெதிரிகிரியை
  3. பொலன்னறுவை

பதுளை

  1. பதுளை
  2. பண்டாரவளை
  3. ஹாலி-எலை
  4. ஹப்புத்தளை
  5. மகியங்கனை
  6. பசறை
  7. ஊவா-பரணகமை
  8. வெலிமடை
  9. வியளுவை

மொனராகலை

  1. பிபிலை
  2. மொனராகலை
  3. வெள்ளவாயை

இரத்தினபுரி

  1. எகலியகொடை
  2. இரத்தினபுரி
  3. பெல்மதுளை
  4. பலாங்கொடை
  5. இறக்குவானை
  6. நிவித்திகலை
  7. கலவானை
  8. கொலொன்னை

கேகாலை

  1. தெடிகமை
  2. கலிகமுவை
  3. கேகாலை
  4. இரம்புக்கனை
  5. மாவனல்லை
  6. அறநாயக்கை
  7. எட்டியாந்தொட்டை
  8. ருவான்வெல்லை
  9. தெரனியாகலை

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 62 Parliament". LawNet.
  2. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 96 Electoral districts". LawNet.
  3. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 98 Number of members to be returned by the several electoral districts and their apportionment among such electoral districts". LawNet.
  4. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 99A Election of Members of Parliament on the basis of the total number of votes polled at a General Election". LawNet.
  5. "process.php?chapterid=1981Y1V1C&sectionno=95&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6 THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 95 Delimitation Commission". LawNet.
  6. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  7. "R1.pdf Preliminary Report (Provisional) - Census of Population and Housing 2011". Department of Census and Statistics, Sri Lanka.
  8. "Number of Voters in Electoral Register 2011". இலங்கைத் தேர்தல் திணைகக்ளம்.
  9. 02/1771 02%20(E).pdf "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1771/2. 13 August 2012. http://www.documents.gov.lk/Extgzt/2012/PDF/Aug/1771 02/1771 02%20(E).pdf.
  10. "Summary of Polling Divisions". Department of Elections, Sri Lanka.
  11. "Special Media Release(Members of Parliament)". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  12. 04/1715 04%20(E).pdf "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1715/4. 18 July 2011. http://www.documents.gov.lk/Extgzt/2011/PDF/July/1715 04/1715 04%20(E).pdf.
  13. 05/1674 05%20(E).pdf "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1674/5. 5 October 2010. http://www.documents.gov.lk/Extgzt/2010/PDF/Oct/1674 05/1674 05%20(E).pdf.
  14. 18/1621 18%20(E).pdf "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1621/18. 30 September 2009. http://www.documents.gov.lk/Extgzt/2009/PDF/Sep/1621 18/1621 18%20(E).pdf.
  15. 20/1569 20E.pdf "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1569/20. 3 October 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/Oct/1569 20/1569 20E.pdf.
  16. 6e.pdf "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1514/6. 11 September 2007. http://www.documents.gov.lk/Extgzt/2007/pdf/Sep/1514-6/1514 6e.pdf.
  17. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1469/10. 30 October 2006. http://www.documents.gov.lk/Extgzt/2006/Pdf/Oct/1469-10/1469-10e.pdf.
  18. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1397/20. 15 June 2005. http://www.documents.gov.lk/Extgzt/2005/JunEx3.htm.
  19. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA Order under Article 98(8)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1359/30. 24 September 2004. http://www.documents.gov.lk/Extgzt/2004/pdf/Sep/1359-30/1359-30e.pdf.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.