கல்முனை

கல்முனை (Kalmunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் தமிழர், சிங்களவர்,முஸ்லிம், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும்.

கல்முனை
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
கிசே பிரிவுகல்முனை
அரசு
  வகைமாநகர சபை
மக்கள்தொகை (2011[1])
  மொத்தம்1,06,780
  அடர்த்தி4,726
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
  கோடை (பசேநே)கோடை நேரம் (ஒசநே+6)

பிரதேசங்கள்

அதன் பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படிருக்கின்றன. .

  • கல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை),
  • கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை),
  • கல்முனை தெற்கு (சாய்ந்தமருது)
  • கல்முனை மேற்கு (நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,சவளக்கடை,மணல்சேனை )

நிருவாக அமைப்பு

பிரதேச செயலாளர் பிரிவுகள்

  • கல்முனை பிரதேச செயலகம்
    • கல்­முனை பிரதேச செயலகப் பிரிவு
    • கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு
  • சாய்ந்தமருது பிரதேச செயலகம்

மக்கள் தொகை

தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2011 தரவுகளின் படி, கல்முனை மாநகரத்தின் மக்கள்தொகை வருமாறு:

பிரதேச செயலகப் பிரிவுகுடும்பங்களின் எண்ணிக்கைவாக்காளர் எண்ணிக்கைசிங்களவர்இலங்கைத் தமிழர்இந்தியத் தமிழர்இலங்கை சோனகர்பரங்கியர்மொத்தம்
கல்முனை பிரதேச செயலகம்10,45929,094124660844,306544,509
கல்முனை (தமிழ்) உப பிரிவு7,53320,09923126,564502,37649229.713
சாய்ந்தமருது பிரதேச செயலகம்6,08716,936051725,3890125,412

மூலம்: சனத்­தொகை மற்றும் வீடு­க­ளுக்­கான புள்­ளி­வி­பரம் -2011

முக்கியத்துவம்

கல்முனை 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலையால் நேரடியாகத் தாக்கப்பட்டு உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.