தம்புள்ளை

தம்புள்ளை ('Dambulla, சிங்களம்: දඹුල්ල) மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும். இது கொழும்பில் இருந்து வீதிவழியாக 148 கிலோமீட்டர் தொலைவிலும் கண்டியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முதன்மையான சந்தியில் அமைந்துள்ள இதன் அமைவிடம் காரணமாக இலங்கையின் மரக்கறி விநியோகத்தில் தம்புள்ள முக்கிய இடம் வகிக்கின்றது.

தம்புள்ளை
நகரம்
தம்புள்ளை
ஆள்கூறுகள்: 7°51′28″N 80°39′09″E
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்மாத்தளை
அரசு
  வகைமாநகர சபை
பரப்பளவு
  நகர்ப்புறம்58.25
மக்கள்தொகை (2016)
  அடர்த்தி429
  நகர்ப்புறம்24,967
  பெருநகர்75,808
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக தம்புள்ளை பொற்கோயில் அமைந்துள்ளது. இங்கு 167 நாட்களில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கும் தெற்காசியாவில் பேரு வீச்சில் காணப்படுவதான இளஞ்சிவப்பு படிகக் கற்களால் ஆன மலைகள், நா மரக் காடுகள் என்பன இங்கு முக்கியத்துவமானவை.

வரலாறு

கி.மு. 7 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதி மக்கள் குடியிருப்புகள் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகள் என்பன கி. மு.முதலாம் நூற்றாண்டுகுரியன. ஆனால் இந்த ஓவியங்களும் சிலைகளும் 11ஆம், 12 ஆம்,18ஆம் நூற்றாண்டுகளில் புனரமைப்பு செய்யப்பட்டன. அனுராதபுர இராசதானியில் இருந்து தனது இங்கு உள்ள குகைகளில் 14 வது வயதில் நாடு கடத்தப்பட்ட பலகம்பா இங்கு உள்ள குகையில் மறைந்து வாழ்ந்தார். தம்புள்ள குகைக் கோயிலில் தவம் செய்து கொண்டிருந்த புத்த பிக்கு இவருக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றினார்.பலகம்பா தனது இராசதானிக்கு மீண்டும் திரும்பி ஆட்சிப் பீடம் ஏறியபோது பிக்குவுக்கு நன்றிசெலுத்தும் வகையில் அங்கு மலைக் கோயில் ஒன்றைக் கட்டினான்.

தம்புள்ளைக்கு அருகில் உள்ள இப்பான்கடுவையில் 27௦௦ ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனித என்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மனித நாகரீகம் இங்கு புத்த சமயத்தின் வருகைக்கு முன் நிலவியமையை காட்டுகின்றது.

இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டதாக கூறப்படுகின்றது.

தம்புள்ளை பொற்கோவில்

இலங்கையில் நன்கு பராமரிக்கப்படும் குகைக் கோயில்களில் மிகப் பெரியது இதுவாகும்.குகையின் உச்சி சுற்றியுள்ள சமவெளியில் இருந்து 160m உயரமானது. மிகக் கவர்ச்சியுடைய விடயம் ஓவியங் களும் சிலைக்கும் கொண்ட 5 குகைகள் காணப்படுதல். கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறுகளை சித்தரிக்கும் படங்களாக இவை உள்ளன.இங்கு மொத்தமாக 153 புத்த சிலைகளும் இலங்கை மன்னர்களின் 3 சிலைகளும் ஏனைய தெய்வங்களுக்குரிய 4 சிலைகளும் காணப்படுகின்றன. பின் குறிப்பிட்ட 4 சிலைகளில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு, விநாயகர் சிலைகளாகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,100 m² ஆகும். சுவர்களின் புத்தரின் போதனைகளைக் காட்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன.

குகையின் காலக் கோடுகள்

  • கி.மு.7 முதல் 3ஆம் நூற்றாண்டு: ஆரம்பக் குடியிருப்பு
  • 1ஆம் நூற்றாண்டு: ஓவியங்களும் சிலைகளும் அமைக்கப்பட்டமை
  • கி. பி 5 ஆம் நூற்றாண்டு: ஸ்துபா கட்டப்பட்டமை
  • கி.பி 12 ஆம் நூற்றாண்டு: மேலதிக சிலைகளும் இந்து கடவுள்களும்
  • கி.பி.18ஆம் நூற்றாண்டு: இன்றைய தோற்றத்தை ஒத்தது
  • கி.பி. 19 ஆம் நூற்றாண்டு: மேலதிக சிலைகள்
  • கி.பி.20 ஆம் நூற்றாண்டு:யுனஸ்கோ காப்பகப் ாபாக பிட்கடனம்

விளையாட்டு

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானம் இப்பிரதேசத்திற்கு பெருமைதரும் ஓர் அமிசமாகும். இது 3 0000 இருக்கைகளைக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றன. இதன் பரப்பளவு 240000 m² ஆகும்.பன்னாட்டு மட்டத்தினாலான விளையாட்டுப் போட்டிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தம்புள்ளை நகரில் நடைபெறுவது உல்லாசப் பயணிகளைக் கவரும் உத்தியாகும்.

போருளாதார முக்கியத்துவம்

தம்புள்ளை உல்லாசப் பயணத்துறையில் முக்கியம் வாய்ந்தது. இதனால் இது சார்ந்த பொருளாதார செயற்பாடுகள் காணப்படுகின்றன. மரக்கறி விற்பனை பரிமாற்ற மையமும் இதில் காணப்படுகின்றன.

கோவில்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.