சம்மாந்துறை
சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்.
சம்மாந்துறை Sammanthurai සමන්තුරේ பழைய மட்டக்களப்பு | |
---|---|
நகரம் | |
![]() சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பிரதேச செயலகம் | சம்மாந்துறை |
மக்கள்தொகை | 60,596 |
அரசு | |
• வகை | பிரதேச சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 132.8 |
• நிலம் | 131.6 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 69,601 |
நேர வலயம் | நேர வலயம் #UTC + 6, F (ஒசநே+5:30) |
இலங்கை அஞ்சல் குறியீடு | 32200 |
தொலைபேசி குறியீடு | 067 (SLT) |
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகரும், தலைவரும், முன்னாள் துறைமுக அபிவிருத்தி புனருத்தாரண அமைச்சருமான மு. ஹு. மு. அஷ்ரப் சம்மாந்துறையில் பிறந்தவர்.
இஸ்லாமும் இஸ்லாமிய கலாச்சாரமும்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 51 பள்ளிவாசல்களையும் மற்றும் மத்ரசதுல் தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியும்[11], அல் ஹசனாத் குர் ஆன் மனனக்கல்லூரியும் ஒரு நம்பிக்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும் ஒவ்வொரு ஜமாஅத் நிருவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.
கல்வி
சம்மாந்துறையில் ஆரம்பப் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரை பலவகையான கல்விக்கூடங்கள் உள்ளன. அவையாவன:
- தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவின் வளாகம்[12]
- சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி[13]
- தொழில் பயிற்சி நிலையம்
- சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்[14],
- பல ஆரம்ப பாடசாலைகள்
- பல உயர்தர பாடசாலைகள்
- சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம்.[15]
- ஆறு பொது நூலகங்கள்
விளையாட்டு
பொது விளையாட்டு மைதானம் ஒன்றும், நீச்சல்தடாகம், உடல்வலுவூட்டல் நிலையம், பெட்மின்டன், மேசைப்பந்து, கூடைப்பந்து மைதானங்களுடன் ஜனாதிபதி விளையாட்டரங்கத் தொகுதி, பொது சிறுவர் பூங்காக்கள் மூன்று ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்துறைகள்
பிரதான தொழில் நெல் விவசாயம், செங்கல் உற்பத்தி, நன்னீர் மீன்பிடி, கல்லுடைத்தல் மற்றும் சிறு கைத் தொழில்களும் உள்ளன.
உசாத்துணை
- தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு (2001), மருதூர் ஏ மஜீத், மருதூர் வெளியீட்டுப் பணியகம், பக்.22
- அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.09
- மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத்
- அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.04
- மட்டக்களப்புத் தமிழகம், இரண்டாம் பதிப்பு, (2002), வி.சி.கந்தையா, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், பக்.391-392
- வரலாற்றில் வாழும் சம்மாந்துறை(2004), எஸ்.அப்துல் றாஸிக், சம்மாந்துறை செந்நெல் கிராமம் குடிநீர் விநியோகத்திட்ட அங்குரார்ப்பண மலர், பக்.1
- மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத், பக்.133
- சோனகத்தேசம்-மிகச் சுருக்கமான அறிமுகம், ஏ.பி.எம்.இத்ரீஸ், பக்.105
- சம்மாந்துறை பெயர் வரலாறு, எம்.ஐ.எம்.சாக்கீர் (2012) வாழும் கலை இலக்கிய வட்டம், பக்.43-44
- அப்துல் றாஸிக், முஸ்லிம்களிடையே குடி வழிமுறை
- http://srilankalaw.lk/revised-statutes/volume-vii/1091.html Sammanthurai Thableekul Islam Arabic College
- http://www.seu.ac.lk/fas/ Faculty applied sciences
- "Department of Technical Education & Training".
- http://www.smmmmvns.sch.lk/web/ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம்
- http://www.strzeo.org/Template/aboutus.html வலய கல்வி அலுவலகம் சம்மாந்துறை