ந. சிறீகாந்தா

கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குற்றவியல் சட்டத்தரணியும் ஆவார்.

கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா
நாஉ
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2010
முன்னவர் நடராஜா ரவிராஜ், ததேகூ
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (2004-2010, 2011-)
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (2010-2011)
இருப்பிடம் பம்பலப்பிட்டி, கொழும்பு, இலங்கை

அரசியலில்

2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீகாந்தா யாழ்ப்பாண மாவட்டத்தில் டெலோ இயக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 33,210 விருப்பு வாக்குகளைப் பெற்றார். ஆனாலும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை.[1] பின்னர், 2006 நவம்பரில் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு சிறீகாந்தா நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2]

2010 இல் சிறீகாந்தா டெலோ இயக்கத்தை விட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டும் வெளியேறினார். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[3] 2010 தேர்தலில் இக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவடத்தில் போட்டியிட்டார். இவரது கட்சியின் எந்த உறுப்பினரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. 2011 சூனில் சிறீகாந்தா தனது புதிய கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் டெலோவில் சேர்ந்தார்.[4]

சிறீகாந்தா 2015 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் டெலோ சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனாலும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[5][6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.