சிவநாதன் கிசோர்

சிவநாதன் கிசோர் (Sivanathan Kisshor, பிறப்பு: 12 மே 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

சிவநாதன் கிசோர்
Sivanathan Kisshor

நாஉ
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிநபர் தகவல்
பிறப்பு மே 12, 1962 (1962-05-12)
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சமயம் இந்து

2004 ஆம் ஆண்டில் கிசோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஏப்ரல் 2004 தேர்தலில் கிசோர் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 17,653 வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 2010 தேர்தலில் ததேகூ கிசோரைத் தனது வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யவில்லை.[3] அதன் பின்னர் கிசோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு 1,262 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[4] 2015 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[5][6]

மேற்கோள்கள்

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (3 ஏப்ரல் 2010). "TAMIL NATIONAL ALLIANCE ENTERS CRITICAL THIRD PHASE -2". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html.
  2. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. டி. பி. எஸ். ஜெயராஜ் (17 ஏப்ரல் 2010). "T.N.A. PERFORMS CREDITABLY IN PARLIAMENTARY ELECTIONS". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325.html.
  4. "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
  6. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.