பா. கஜதீபன்

பாலச்சந்திரன் கஜதீபன் (Balachandran Gajatheepan, பிறப்பு: 30 ஏப்ரல் 1982) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.

பி. கஜதீபன்
B. Gajatheepan
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 அக்டோபர் 2013
தனிநபர் தகவல்
பிறப்பு 30 ஏப்ரல் 1982 (1982-04-30)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
தொழில் ஆசிரியர்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

1982 ஆம் ஆண்டில் பிறந்த கஜதீபன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியை முடித்தவர்..[1] அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரும் ஆவார்.[1]

அரசியலில்

கஜதீபன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 23,669 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் பதவியேற்றுக் கொண்டார்.[4][5][6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.