கோப்பாய்
கோப்பாய் (Kopay) யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமை இடமாகவும் உள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் நீர்வேலியும், மேற்கு எல்லையில் உரும்பிராயும், தெற்கு எல்லையில் இருபாலையும் உள்ளன. கடலேரி கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மானிப்பாயில் இருந்து தென்மராட்சியில் உள்ள கைதடி என்னும் ஊருக்குக் இவ்வூரினூடாகச் செல்லும் வீதி பருத்தித்துறை வீதியை வெட்டிச் செல்லும் இடம் கோப்பாய்ச் சந்தி என அழைக்கப்படுகின்றது. கோப்பாயின் வணிகப் பகுதி இச் சந்தியை அண்டியே காணப்படுகின்றது.
கோப்பாய் Kopay | |
---|---|
நகரம் | |
![]() கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் கிழக்கு |
ஆலயங்கள்
- கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானம்.
- கோப்பாய் சித்திர வேலாயுதசுவாமி கோவில்.
- கோப்பாய் சக்கரத்தாழ்வார் ஆலயம்.
- கோப்பாய் வெள்ளெருவைப் பிள்ளையார்.
- கோப்பாய் அடைப்பந்தாளி வைரவர் கோவில்
கல்வி
- கோப்பாயில் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட பழைமையான "கோப்பாய் தமிழ் கலவன் பாடசாலை" உள்ளது. இது பொதுவாக அவ்வூர் மக்களால் நாவலர் பாடசாலை என்றே அழைக்கப்படுகிறது.
- கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி,
- சரவணபவானந்தா வித்தியாலயம் என்பவை ஏனைய பிரபல பாடசாலைகள்.
அறிஞர் பெருமக்கள்
- சபாபதி நாவலர், தமிழறிஞர்
- இருபாலை சேனாதிராச முதலியாரும் அவரது வழித்தோன்றல்களும் இம் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்கள்.
- 1940-50களில் பிரபல ஓவியராகத் திகழ்ந்த எஸ். ஆர். கனகசபை (எஸ்.ஆர்.கே) கோப்பாய் பழைய வீதியைச் சேர்ந்தவர்.
- சேர் கந்தையா வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்
- இ. மகேஸ்வர சர்மா (கோவை மகேசன்) (1938-1992), சுதந்திரன் பத்திரிகை, சுடர் இதழ் ஆகியவற்றின் ஆசிரியர், நாட்டுப்பற்றாளர்
தொல் பெருமை
யாழ்ப்பாண அரசுக் காலத் தலைநகரமான நல்லூருக்கு சிறு தொலைவில் உள்ள இவ்வூரில், யாழ்ப்பாண மன்னர் கோட்டையொன்றை அமைத்திருந்தனர்.