வலிகாமம்

வலிகாமம், இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் முக்கியமானது குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பிரிவாகும். இதன் வடக்கே இந்து மாகடலும், மேற்கே தீவுப் பகுதிக்கும், குடாநாட்டுக்கும் இடையிலான கடல் பகுதியும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும், எல்லைகளாக அமைந்திருக்கத் தெற்கில் ஒருபகுதியில் தென்மராட்சிப் பிரிவும், கிழக்கில் வடமராட்சிப் பிரிவும் அமைந்துள்ளன.

குடாநாட்டின் வளம் மிக்க பகுதிகள் பெரும்பாலும் வலிகாமப் பகுதியிலேயே அமைந்துள்ளன. யாழ்ப்பாண அரசுக் காலத்திலிருந்தே இப் பகுதி, ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகவும், மக்கள் அடர்ந்து வாழும் பகுதியாகவும் விளங்கி வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதாகக் கருதப்படும் கதிரைமலை என அழைக்கப்படும் கந்தரோடையும், பிற்கால யாழ்ப்பாண அரசின் தலைநகரமான நல்லூரும், தற்கால வடமாகாணத்தின் தலைமை நகரமான யாழ்ப்பாணமும் வலிகாமப் பிரிவிலேயே உள்ளன.

வலிகாமத்தில் உள்ள ஊர்கள்

  1. யாழ்ப்பாண நகரம்
  2. உடுவில்
  3. சுன்னாகம்
  4. சங்குவேலி
  5. நல்லூர்
  6. திருநெல்வேலி
  7. மானிப்பாய்
  8. கோண்டாவில்
  9. கொக்குவில்
  10. கந்தரோடை
  11. மல்லாகம்
  12. சண்டிலிப்பாய்
  13. சங்கானை
  14. வட்டுக்கோட்டை
  15. அராலி
  16. தெல்லிப்பளை
  17. சுழிபுரம்
  18. பண்டத்தரிப்பு
  19. சில்லாலை
  20. இளவாலை
  21. மாவிட்டபுரம்
  22. கீரிமலை
  23. காங்கேசன்துறை
  24. பலாலி
  25. குரும்பசிட்டி
  26. வசாவிளான்
  27. மூளாய்
  28. நாவாந்துறை
  29. இணுவில்
  30. புத்தூர்
  31. நீர்வேலி
  32. உரும்பிராய்
  33. அரியாலை
  34. கரந்தன்
  35. குப்பிளான்
  36. ஏழாலை
  37. நவாலி
  38. மாதகல்
  39. கொழும்புத்துறை
  40. வண்ணார்பண்ணை
  41. கோப்பாய்
  42. ஆனைக்கோட்டை
  43. ஊரெழு
  44. அச்செழு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.