பண்டத்தரிப்பு

9°46′22.43″N 79°58′3.22″E பண்டத்தரிப்பு (Pandatherippu) என்பது இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம், காலையடி மற்றும் பிரான்பற்று (பிராம்பத்தை) என்பனவாகும்.

பண்டத்தரிப்பு

பண்டத்தரிப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.772897°N 79.967561°E / 9.772897; 79.967561
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

"பண்டத்தரிப்பு" என்ற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒரு காலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறு சிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர்.

1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.