வண்ணார்பண்ணை
வண்ணார்பண்ணை (Vannarpannai) தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் குளம்" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வண்ணார்பண்ணை | |
![]() ![]() வண்ணார்பண்ணை
| |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9.669061°N 80.024802°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம்
தற்காலத்தில் வண்ணார்பண்ணை என்று அழைக்கப்படும் பகுதி, நகர மத்திக்கு அண்மையில் தொடங்கி, காங்கேசந்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்னும் வீதிகளை அண்டிச் சுமார் ஒரு மைல் தூரம் வரை வியாபித்து உள்ளது.
வரலாறு
யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை பனங் கூடல்கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் கோட்டையொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
கோயில்கள்
- வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம்
- வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்
- வண்ணார்பண்ணை நடேசர் கோவில்
- சாந்தையர்மடம் கற்பக விநாயகர் ஆலயம்