கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பிறப்பு: சனவரி 16, 1974), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார்.[1]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Gajendrakumar Ponnambalam

நா.உ
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர்
யாழ்ப்பாண மாவட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2010
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 16, 1974 (1974-01-16)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
இருப்பிடம் "கீதாஞ்சலி" 15, குயின்ஸ் சாலை, கொழும்பு 3, இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் பல்கலைக்கழகம்,
கொழும்பு ரோயல் கல்லூரி
தொழில் சட்டத்தரணி
சமயம் இந்து

வாழ்க்கைக் குறிப்பு

கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் அரசியல்வாதி குமார் பொன்னம்பலத்தின் மகனும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பெயரனும் ஆவார்.[2]

கஜேந்திரகுமார் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1995 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் "லிங்கன் இன்" கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டில் இலங்கை வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார்.

அரசியலில்

கஜேந்திரகுமார் 2000 சனவரி 5 இல் அவரது தந்தை குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டதி அடுத்து அரசியலில் இறங்கினார்.[2] இவர் டிசம்பர் 2001[3] முதல் பெப்ரவரி 2010 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.[4]

2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சியினருடன் விலகிய இவர் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை ஆரம்பித்தார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தனது புதிய கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் இத்தேர்தல்களில் இவரது கட்சியினர் எத்தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.[5]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிச் சின்னத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்துத் தேர்தல் மாவட்டங்களிலும் "ஒரு நாடு, இரண்டு தேசம்" என்ற கோரிக்கையுடன் போட்டியிட்டது. கஜேந்திரகுமார் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் கஜேந்திரகுமார் உட்பட எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[6][7][8]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2001 நாடாளுமன்றம்[3]யாழ்ப்பாண மாவட்டம்ததேகூ29,641தெரிவு
2004 நாடாளுமன்றம்[4]யாழ்ப்பாண மாவட்டம்ததேகூ60,770தெரிவு
2010 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்ததேமமுதேர்ந்தெடுக்கப்படவில்லை
2015 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்ததேமமுதேர்ந்தெடுக்கப்படவில்லை

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.