க. பத்மநாதன்

கனகசபை பத்மநாதன் (Kanagasabai Pathmanathan, 30 மே 1948 - 21 மே 2009) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

க. பத்மநாதன்
K. Pathmanathan

நா.உ.
அம்பாறை மாவட்ட நாடாம்முமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
பின்வந்தவர் தோமசு வில்லியம், ததேகூ
தனிநபர் தகவல்
பிறப்பு மே 30, 1948(1948-05-30)
இறப்பு 21 மே 2009(2009-05-21) (அகவை 60)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பணி அரசு அதிகாரி
சமயம் இந்து

ஆரம்ப வாழ்க்கை

கனகசபை பத்மநாதன் அம்பாறை மாவட்டம், காரைதீவில் இளையதம்பி கனகசபை, சின்னத்தம்பி பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இலங்கைக் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் வவுனியா கட்டிடப்ப் பொருட்கள் திணைக்களத்தில் பணியாற்றினார்.[1] அரசியலுக்கு வரும் முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2]

அரசியலில்

பத்மநாதன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,002 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3]

பத்மநாதன் 2009 மே 21 அன்று சிறிது கால சுகவீனமற்ற நிலையில் மதுரையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

  1. "மண்ணை மாண்புறச்செய்த மைந்தரின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி". karaitivu.org (4 சூன் 2013). பார்த்த நாள் 27 செப்டம்பர் 2015.
  2. "TNA parliamentarian Kanagasabai passes away". தமிழ்நெட் (21 மே 2009). பார்த்த நாள் 27 செப்டம்பர் 2015.
  3. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.