சே. ஜெயானந்தமூர்த்தி
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (பிறப்பு: 16 செப்டம்பர் 1965)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
எஸ். ஜெயானந்தமூர்த்தி S. Jeyanandamoorthy நா.உ | |
---|---|
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 16 செப்டம்பர் 1965 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | ஆசிரியர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயானந்தமூர்த்தி வீரகேசரி, தமிழ்நெட் ஆகியவற்றின் செய்தியாளராகப் பணியாற்றியவர்.[2]
ஜெயானந்தமூர்த்தி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.[3] 44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4]
ஜெயானந்தமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற துணை இராணுவக் குழுவினரால் அடிக்கடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வந்தனர்..[5][6][7] இதனை அடுத்து இவர் ஐக்கிய இராச்சியத்திற்கு புலம் பெயர்ந்தார்.[8]
2010 மே மாதத்தில் இவர் நாடு கடந்த தமிழீழ அரசு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[9]
மேற்கோள்கள்
- "Directory of Past Members: Senathirajah Jeyanandamoorthy". இலங்கை நாடாளுமன்றம்.
- "Sri Lanka: 2004 Annual Report". எல்லைகளற்ற செய்தியாளர்கள் (3 மே 2004).
- டி. பி. எஸ். ஜெயராஜ் (3 ஏப்ரல் 2010). "Tamil National Alliance enters critical third phase-2". டெய்லி மிரர். Archived from the original on 16 May 2010. http://web.archive.org/web/20100516020551/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html.
- "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Legislators' relatives 'abducted'". பிபிசி Sinhala. 12 டிசம்பர் 2007. http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/12/printable/071212_tna_abducted.shtml.
- "How credibile were the Batti polls?". த நேசன். 23 மார்ச் 2008. http://www.nation.lk/2008/03/23/special5.htm.
- "Resolution adopted unanimously by the IPU Governing Council at its 181st session". Inter-Parliamentary Union. 10 அக்டோபர் 2007.
- டி. பி. எஸ். ஜெயராஜ் (17 ஏப்ரல் 2010). "T.N.A. Performs creditably in parliamentary elections". டெய்லிமிரர். Archived from the original on 28 ஏப்ரல் 2010. http://web.archive.org/web/20100428064301/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325-tna-performs-creditably-in-parliamentary-elections.html.
- "Jeyananthamoorthy tops TGTE list in UK". தமிழ்நெட். 3 மே 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31669.