தத்தாரிஸ்தான்

தத்தாரிஸ்தான் குடியரசு (Republic of Tatarstan, உருசியம்: Респу́блика Татарста́н) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் கசான் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 3.786.488. ( 2010 கணக்கெடுப்பு )[8]

தத்தாரிஸ்தான் குடியரசு
Republic of Tatarstan

Республика Татарстан (Russian)
Татарстан Җөмһүрияте (Tatar)
  குடியரசு  

கொடி

சின்னம்
தேசியப் பண்: தத்தார்ஸ்தான் குடியரசு நாட்டுப் பண்[1]
ஆள்கூறுகள்: 55°33′N 50°56′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வால்கா[2]
பொருளாதாரப் பகுதிகள்வால்கா[3]
அமைக்கப்பட்டதுMay 27, 1920[4]
தலைநகரம்கசான்
அரசாங்கம் (April 2014 இல் நிலவரம்)
  President[5]ருஸ்தாம் மின்னிகான்னோவ்[6]
  சட்டமன்றம்State Council[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்68,000 km2 (26,000 sq mi)
பரப்புத் தரம்44வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்37,86,488
  தரம்8வது
  அடர்த்தி[9]55.68/km2 (144.2/sq mi)
  நகர்75.4%
  கிராமம்24.6%
மக்கள் தொகை (சனவரி 2014 est.)
  மொத்தம்38,38,374[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-TA
அனுமதித் தகடு16, 116
சட்டபூர்வ மொழிஉருசியம்;[12] தடர[13][14]
அலுவலக வலைத்தளம்

சொல்

"தத்தார்ஸ்தான்" என்ற பெயர் இங்கு வாழக்கூடிய இனக்குழுவினரான தடார்கள் என்ற பாரசீக மொழி பெயரில் இருந்து பெறப்பட்டது. இன்னொரு பெயர் உருசிய மொழியில் வழக்கில் உள்ளது. இது “Тата́рия” (Tatariya) என்ற பெயர் ஆகும். சோவியத் ஆட்சியின் போது “Tatar ASSR” என்று வழங்கப்பட்டது.

நிலவியல்

தர்தாரிஸ்தான குடியரசின் வரைபடம்

இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் மையத்தில் அமைந்துள்ளது. மாஸ்கோவில் இருந்து கிழக்கில் சுமார் 800 கிலோமீட்டர் (500 மைல்) தொலைவில் உள்ளது, வோல்கா ஆறு மற்றும் காம ஆறு ( வோல்காவின் கிளையாறு) ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது, மற்றும் உரால் மலைகளுக்கு கிழக்கில் பரவியுள்ளது.

  • எல்லைகள்: ( உருசிய கூட்டமைப்புக்குள்):
  • வடக்கில் கீரோவ் ஒப்லாஸ்து, வடக்கு மற்றும் வடகிழக்கில் உத்முர்த்தியா குடியரசு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பாஷ்கொர்டொஸ்தான், தென்கிழக்கில் ஒரன்பூர்க் ஒப்லாஸ்து, தெற்கில் சமர ஒப்லாஸ்து , தெற்கு மற்றும் தென்மேற்கில் ஊழியனோவ்ஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் சுவாசியா, மேற்கு மற்றும் வடமேற்கில் மாரீ எல் போன்றவை உள்ளன.
  • உயரமான இடம்: 343 மீ (1,125 அடி)
  • வடக்கு தெற்காக அதிகபட்சமாக: 290 கிலோமீட்டர் (180 மைல்) நீளம் உள்ளது.
  • கிழக்கு மேற்காக அதிகபட்டமாக: 460 கிமீ (290 மைல்) நீளம் உள்ளது.

இயற்கை வளங்கள்

  • குடியரசின் முக்கிய இயற்கை வளங்கள் எண்ணெய் , இயற்கை எரிவாயு , ஜிப்சம் மற்றும் பல. குடியரசில் உள்ள எண்ணெய் வளம் பில்லியன் டன்னுக்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[15]

காலநிலை

  • சராசரி சனவரி வெப்பநிலை: -16 டிகிரி செல்சியஸ் (3 ° பாரங்கீட்),
  • சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்)
  • சராசரி ஆண்டு வெப்பநிலை: +4 டிகிரி செல்சியஸ் (39 °F),
  • சராசரி ஆண்டு மழையளவு : 500 மிமீ (20 அங்குளம்) வரை

மக்கள் வகைப்பாடு

குடியரசின் மக்கள் தொகை: 3,786,488 ( 2010 கணக்கெடுப்பு ); (3,779,265 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,637,809 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ).

குடியரசில் சுமார் 2 மில்லியன் தடர் இன மக்களும், 1.5 மில்லியன் ரஷ்யர்களும் உள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான சுவாஷ் , மாரி , உத்முர்த் ஆகிய இனத்தவர்கள் தடர மொழியே பேசுகின்றனர். உக்ரைனியர், மோர்டிவின், பாஷ்கிர் போன்ற சிறுபான்மையினரும் உள்ளனர். பெரும்பாண்மையான தடார்கள் சுன்னி முஸ்லிம்கள் என்றாலும், தடார்களில் ஒரு சிறு பிரிவினர் கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றும் கிருத்துவர்களாகவும் உள்ளனர்.

மதம்

922 ல் துவங்கப்பட்ட மாகாணமான இது, நவீன உருசியாவின் எல்லைக்குள் உருவான முதல் முஸ்லீம் மாநிலமாக இருந்தது. இப்பகுதி தடார்களுக்கு வோல்கா பல்கேரியாவில் இருந்து இஸ்லாம் மதப் பரப்புநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.[16]

இக்குடியரசில் 1990 ஆம் ஆண்டுவரை 100 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2004 இல் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது. ஜனவரி 1, 2008 வரையான காலகட்டத்தில் 1,398 மத அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,055 அமைப்புகள் முஸ்லீம் அமைப்புகள் ஆகும். இன்று, சுன்னி இஸ்லாமியர் மக்கள் தொகையில் 55% ஆகும்.[17]

குடியரசில் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்துவம் இரண்டாவது பெரிய மதமாக, 150 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது,[18]

பொருளாதாரம்

இக்குடியரசு ரஷ்யாவின் மிகவும் வளர்ச்சியுற்ற பகுதிகளில் ஒன்றாகும். குடியரசில் தொழில்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது, ஒரு நபருக்கான குடியரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004 ல் 12.325 அமெரிக்க டாலராக இருந்தது.[19] 2008இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 930 பில்லியன் ரூபிள் ஆகும்.[15]

குடியரசின் செல்வத்துக்கு முக்கிய ஆதாரமாக எண்ணெய் வளம் உள்ளது. வருடத்திற்கு 32 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி மேற்பட்டுகிறது. இதை 1 பில்லியன் டனானாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.[15][20] குடியரசில் தொழில்துறை உற்பத்தியின் பங்கு 45% ஆகும். உள்நாட்டு உற்பத்தியில் . மிகவும் வளர்ந்த உற்பத்தி தொழில்கள் பெட்ரோலிய துறை, மற்றும் கட்டுமான இயந்திரங்கள் போன்றவை ஆகும்.

மேற்கோள்கள்

  1. Law #2284, Chapter III
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Constitution of the Republic of Tatarstan, Article 9.2
  5. Official website of the President of the Republic of Tatarstan. Rustam Minnikhanov
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  7. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  8. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  9. Republic of Tatarstan Territorial Branch of the Russian Federal State Statistics Service. வார்ப்புரு:PDFLink (உருசிய மொழியில்)
  10. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  11. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  12. Constitution of the Republic of Tatarstan, Article 8.1
  13. Daniel R. Kempton and Terry D. Clark. Unity or Separation: Center-Periphery Relations in the Former Soviet Union. Praeger Publishers, 2002, p. 110.
  14. Economy: The Republic of Dagestan
  15. Tatarstan Parliament Introduces New Islam Holiday
  16. Alexey D. Krindatch. Patterns of Religious Change in Postsoviet Russia: Major Trends from 1998 to 2003. Religion, State & Society, Vol. 32, No. 2, June 2004. Published by BiblicalStudies.org.uk, p. 123.
  17. http://www.chanceforlove.com/archives/content/full/5870
  18. Human Development Index in the Regions of Russia United Nations
  19. Tatarstan Economy
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.