கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்

கான்டி-மான்சி, தன்னாட்சி பிராந்தியத்திற்கான - யுக்ரா அல்லது காந்தி-மன்சிய்ஸ்க் தன்னாட்சி பிராந்தியத்திற்கான - உக்ரா (Khanty-Mansi Autonomous Okrug — Yugra or Khanty-Mansiysk Autonomous Okrug – Ugra) [9] ( ரஷியன் :Ха́нты-Манси́йский автоно́мный о́круг — Югра́, Khanty-Mansiysky avtonomny okrug – Yugra) என்பது இரஷ்யக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். மக்கள் தொகை: 1,532,243 ( 2010 கணக்கெடுப்பு ) ஆகும்.[5] இந்த பகுதியின் பூர்வகுடி மக்கள் கஹண்டி, மற்றும் மன்சி ஆவர் இவர்கள் ஓப் அக்ரிக் மக்கள் என்று போதுவாக அழைக்கப்படுகின்றனர். இங்கு உள்ளூர் மொழிகளாக, கஹண்டி மொழி மற்றும் மன்சி மொழி ஆகியவை உள்ளன. தன்னாட்சி பிராந்தியத்திற்கான உள்ள சிறப்பு அந்தஸ்தாக யூரலிய மொழிகளான ஹங்கேரியன் . ரஷியன் போன்றவை மட்டுமே உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன. இரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் பெரும்பான்மை (51%) [10] பகுதி இந்த தன்னாச்சி பகுதியில் இருந்தே எடுக்கப்படுவதால் இது பொருளாதார முக்கித்துவம்வாய்ந்த பகுதியாக விளங்குகிறது.

கான்டி-மான்சி தன்னாட்சி
பிராந்தியத்திற்கான — யுக்ரா

Khanty-Mansi Autonomous Okrug — Yugra
Ханты-Мансийский автономный округ — Югра (Russian)
  தன்னாட்சி பிராந்தியம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 62°15′N 70°10′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்உரல்[1]
பொருளாதாரப் பகுதிகள்மேற்கு சைபீரியா[2]
அமைக்கப்பட்டதுதிசம்பர் 10, 1930
நிர்வாக மையம்கான்டி-மான்சிக்
அரசாங்கம் (March 2011 இல் நிலவரம்)
  ஆளுநர்நதல்யா கோமரோவா[3]
  சட்டமன்றம்Duma
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[4]
  மொத்தம்534,800 km2 (206,500 sq mi)
பரப்புத் தரம்9th
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[5]
  மொத்தம்15,32,243
  தரம்29th
  அடர்த்தி[6]2.87/km2 (7.4/sq mi)
  நகர்91.5%
  கிராமம்8.5%
உரசிய நேர வலயம்[7]
ISO 3166-2:RURU-KHM
அனுமதித் தகடு86
சட்டபூர்வ மொழிஉருசியம்[8]
அலுவலக வலைத்தளம்

வரலாறு

ஒக்ரு பிராந்தியத்தியம் திசம்பர் 10 1930இல் நிறுவப்பட்டது. ( Ostyak–Vogul National Okrug (Остя́ко-Вогу́льский национа́льный о́круг). அக்டோபர் 1940 ல், இது கான்டி-மான்சி தேசிய பிராந்தியத்தியம் (Khanty-Mansi National Okrug) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1977 ஆம் ஆண்டில், பிற தேசியப் ஓக்ருகுஸ்களுடன் இணைந்து ரஷியன் SFSR , சுயாட்சி பிராந்தியத்திற்கான (கன்டி-மான்சி தன்னாட்சி பிராந்தியம்) என்று மாறியது. நிர்வாக மையமாக காந்தி-மன்சிய்ஸ்க் ஆகும். 2003 ஆம் ஆண்டில், யுங்ரா (Yugra ) என்ற அதிகாரப்பூர்வ பெயர் இணைக்கப்பட்டது.

புவியியல்

இந்த பிராந்தியத்தியம் மேற்கு சைபீரியாவின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு பாயும் முதன்மை ஆறு ஓப் ஆகும் இதில் இதன் கிளை ஆறுகளான இர்டைஷ், ட்ரைபுடரி ஆகியவை வந்து கலக்கின்றன.

மக்கள் வகைப்பாடு

இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை: 1,532,243 ( 2010 கணக்கெடுப்பு ); 1,432,817 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); [11] 1,268,439 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) [12] இந்த தன்னாட்சி பிராந்தியத்தியம் 523.100 கி.மீ² பரப்பளவு கொண்டது, ஆனால் இந்த பிரதேசப்பகுதியில் மக்கள் அடர்த்தி குறைவாகவே உள்ளது. இதன் நிர்வாக மையம் காந்தி-மன்சிய்ஸ்க் என்றாலும் பெரிய நகரங்களில் என்றால் அவை சூர்குத் , நிழ்நெவர்த்தோவிஸ்க் , மற்றும் நிப்டடையுகன்ஸ்க் போன்றவை ஆகும்.

இனக்குழுக்கள்

இந்த தன்னாட்சி பிராந்தியத்தில் காண்டை, மன்சி, நினிட்ஸ் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இந்த பிராந்தியத்திற்கான மொத்த மக்கள் தொகையில் இவர்கள் தொகை 2.2% மட்டுமே ஆகும். தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள இயற்கை எரிவாயு வளம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து குடியேறியவர்களை ஈர்த்துள்ளது. 2010 கணக்கெடுப்பில் இருபத்து ஐந்து இனக்குழுக்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது ஒவ்வுரு குழுவிலும் இரண்டாயிரம் பேருக்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பின்வருமாறு இனக் கலவை உள்ளது: கான்டி-மான்சி தன்னாட்சி பிராந்தியத்தில் வாழும் இனக்குழுக்களின் விகிதம்:[11]

இனக்குழு%
ருஷ்யன்68.1%
டட்டர்7.6%
உக்ரேனியர்6.4%
பாஷ்கிர்2.5%
அசிரி1.8%
கான்டை1.3%
பிலருஷியன்1%
கும்வைக்1%
சுவாஷ்0.9%
லிஸ்ஜின்0.9%
மன்சி0.8%
மோல்டோவன்0.7%
உஸ்பெக்0.7%
செசெனியர்0.5%
ஜெர்மனியர்0.5%
ஆர்மீனியன்0.4%
பிறர்3.4%

மதம்

Orthodox Church of the Resurrection in Khanty-Mansiysk. Orthodox Christianity is the main religion in Khanty-Mansi Autonomous Okrug.

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி[12] இப்பிராந்திய மக்கள் தொகையில் 38.1% உருசிய மரபுவழித் திருச்சபை (கிருத்துவம்) , 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் ரோண்னோவெரி (ஸ்லாவிக் நியோபகனியம்) நம்பிக்கையாளர்கள் ஆவர். ஷமானிஸம் . முஸ்லிம்கள் (பெரும்பாலும் டட்டார் இனத்தவர் ) மக்கள் தொகையில் 11% ஆவார்கள். மக்கள் தொகையில் 23% மதத்தைப் பற்றி குறிப்பிடாதவர்கள் ஆவர். 11% நாத்திகர் , மற்றும் 10.9% மற்ற மதத்தினர் அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.[12]

போக்குவரத்து

இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான சரக்குப் போக்குவரத்து முதன்மையாக நீர் வழியாகவும், தொடர்வண்டி போக்குவரத்து வழியாக நடக்கிறது. 29% சாலை வழியாகவும், 2% விமான போக்குவரத்து வழியாகவும் நடக்கிறது. இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 1106 கி.மீ. ஆகும். சாலைகள் நீளம் மொத்தம் 18,000 ற்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவு உள்ளது.

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Khanty–Mansi Autonomous Okrug. Natalya Vladimirovna Komarova, Governor of Khanty–Mansi Autonomous Okrug (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  5. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  6. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  7. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  8. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  9. "GENERAL INFORMATION". The official site of the Khanty-Mansi Autonomous Okrug — Yugra (2012-08-29). பார்த்த நாள் 2015-04-18.
  10. В Ханты-Мансийском автономном округе добыта 10-миллиардная тонна нефти
  11. (XLS) National Composition of Population for Regions of the Russian Federation. 2010 Russian All-Population Census. 2010. http://www.gks.ru/free_doc/new_site/population/demo/per-itog/tab7.xls. பார்த்த நாள்: 2011-12-22.
  12. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.