பென்சா மாகாணம்

பென்சா மாகாணம் (Penza Oblast, உருசியம்: Пе́нзенская о́бласть, பென்சென்ஸ்கயா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186 (2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பு)[7] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பென்சா நகரம் ஆகும்.

பென்சா மாகாணம்
Penza Oblast

Пензенская область (Russian)
  மாகாணம்  

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 53°15′N 44°34′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிகள்வோல்கா[2]
அமைக்கப்பட்டதுபெப்ரவரி 4, 1939[3]
நிர்வாக மையம்பென்சா
அரசாங்கம் (திசம்பர் 2014 இல் நிலவரம்)
  ஆளுநர்[4]இவான் பெலோசெர்த்செவ்[5]
  சட்டமன்றம்பென்சா சட்டமன்றம்[4]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[6]
  மொத்தம்43,200 km2 (16,700 sq mi)
பரப்புத் தரம்59வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்13,86,186
  தரம்32வது
  அடர்த்தி[8]32.09/km2 (83.1/sq mi)
  நகர்67.1%
  கிராமம்32.9%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
  மொத்தம்13,55,618[9]
உரசிய நேர வலயம்[10]
ISO 3166-2:RURU-PNZ
அனுமதித் தகடு58
சட்டபூர்வ மொழிஉருசியம்[11]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

முதன்மை ஆறுகள்

பென்சா மாகாணத்தில் சுமார் 3000 ஆறுகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த நீளம் 15,458 கி.மீ ஆகும். இதில் கீழ்கண்டவை பெரிய ஆறுகள்:

  • சுரா ஆறு
  • மோக்சா ஆறு
  • கபியோர் அல்லது ஹஃப்யோர் ஆறு
  • பென்சா ஆறு. இந்த ஆற்றின் பெயராலேயே பென்சா நகரம் அமைந்துள்ளது.

விலங்குகள்

இந்த பிராந்தியத்தில் முதுகெலும்புள்ள விலங்கினங்கள் 316 வகையான இனங்கள் உள்ளன. இதில்

  • நீர்நில வாழ்வன சுமார் பத்து இனங்கள்
  • பறவைகள் 200 இனங்கள்
  • ஊர்வன சுமார் எட்டு இனங்கள்
  • பாலூட்டிகள் 68 இனங்கள்
  • நீர்நிலைப் பகுதிகளில் சுமார் 50 மீன் இனங்கள் உள்ளன.

பொருளாதாரம்

பென்சா மாகாணம் வோல்கா பொருளாதாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உருசியாவின் முன்னணி தயாரிப்புகளான கோதுமை, கம்பு, ஓட்ஸ், தினை ஆகிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கடுகு, மற்றும் இறைச்சி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.[12]

மக்கள் வகைப்பாடு

மாகாண மக்கள் தொகை: 1,386,186 (2010 கணக்கெடுப்பு); 1,452,941 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 1,504,309 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

முதன்மைப் புள்ளிவிவரங்கள்

2012ம் ஆண்டு

  • பிறப்பு: 14,777 (1000 பேருக்கு 10.8)
  • இறப்பு: 20,419 (1000 பேருக்கு 14.9) [13]

2008ம் ஆண்டு

  • பிறப்பு: 7,962 (2008 ஜனவரி-சூலை)
  • இறப்பு: 13,608 (2008 ஜனவரி-சூலை)[14]

மொத்தக் கருத்தரிப்பு விகிதம்

  • 2009 - 1.38
  • 2010 - 1.37
  • 2011 - 1.36
  • 2012 - 1.48
  • 2013 - 1.49
  • 2014 - 1.54 (கணிப்பு)[15]

இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010)

  • ரஷ்யர்கள் - 86,8%
  • தடார்கள் - 6.4%
  • மால்டோவியர்கள் - 4.1%
  • உக்ரைனியர்கள் - 0.7%
  • சுவாஷ் மக்கள் - 0.4%
  • ஆர்மேனியர்கள் - 0.3%
  • மற்றவர்கள் - 1.3%
  • 43,283 பேர் கணக்கெடுப்பில் தங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[7][16]

சமயம்

2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[17] இந்த மாகாண மக்கள்தொகையில் 42.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 7% முஸ்லீம்கள், 15% சமயநாட்டமற்ற ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள், 9% நாத்திகர்கள், 3.1% மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[17]

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. USSR. Administrative-Territorial Divisions of the Union Republics, p. 202
  4. Charter of Penza Oblast, Article 7
  5. Official website of Penza Oblast. Ivan Alexandrovich Belozertsev, Governor of Penza Oblast (உருசிய மொழியில்)
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  7. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  8. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  9. Penza Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность постоянного населения Пензенской области на 1.01.2015 (உருசிய மொழியில்)
  10. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  11. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  12. Russia Profile org: information from the official Penza Oblast website at www.penza.ru
  13. http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm
  14. "Официальный портал Правительства Пензенской области - О регионе - Население" (ru). penza.ru. மூல முகவரியிலிருந்து 26 May 2008 அன்று பரணிடப்பட்டது.
  15. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  16. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru (2011-12-19). பார்த்த நாள் 2012-12-25.
  17. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.