சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்

சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம் (Chukotka Autonomous Okrug உருசிய மொழி : Чуко́тский автоно́мный о́круг, tr. Chukotsky avtonomny okrug; IPA: [tɕʊˈkotskʲɪj ɐftɐˈnomnɨj ˈokrʊk]; Chukchi: Чукоткакэн автономныкэн округ, Chukotkaken avtonomnyken okrug) அல்லது சுக்கோட்டாChukotka (Чукотка) எனப்படுவது ரஷ்யா கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த (தன்னாட்சி பிராந்தியத்தியம் ) ரஷியன் தூர கிழக்கு பகுதியாகும். மக்கள் தொகை: 50,526 ( 2010 கணக்கெடுப்பு ).[10] இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் பரப்பளவு 737.700 சதுர கிலோமீட்டர் (284,800 சதுர மைல்) ஆகும். இதன் முதன்மை நகரம் மற்றும் நிர்வாக மையம் அனடீர் ஆகும். அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்ற பிறகான காலத்தில் இருந்து இந்த பிராந்தியமே ரஷ்யாவின் மிகவும் மிகத் தொலைவில் உள்ள ஒரு வடக் கிழக்கு பிராந்தியமாக மேற்கு அரைக்கோளத்தில் விளங்குகிறது. (180வது தீர்க்கரேகைக்கு கிழக்கே).

சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம்
Chukotka Autonomous Okrug

Чукотский автономный округ (Russian)
  Autonomous okrug  

கொடி

சின்னம்
தேசியப் பண்: Anthem of Chukotka Autonomous Okrug[1]
ஆள்கூறுகள்: 66°40′N 171°00′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்தூரக் கிழக்கு[2]
பொருளாதாரப் பகுதிகள்தூரக் கிழக்கு[3]
அமைக்கப்பட்டதுதிசம்பர் 10, 1930[4]
நிர்வாக மையம்அனடைர்[5]
அரசாங்கம் (April 2015 இல் நிலவரம்)
  ஆளுநர்[6]ரோமன் கோப்பின்[7]
  சட்டமன்றம்Duma[8]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[9]
  மொத்தம்737,700 km2 (284,800 sq mi)
பரப்புத் தரம்7th
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[10]
  மொத்தம்50,526
  தரம்82nd
  அடர்த்தி[11]0.07/km2 (0.18/sq mi)
  நகர்64.8%
  கிராமம்35.2%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
  மொத்தம்50,540[12]
உரசிய நேர வலயம்[13]
ISO 3166-2:RURU-CHU
அனுமதித் தகடு87
சட்டபூர்வ மொழிஉருசியம்[14]
அலுவலக வலைத்தளம்

நிலவியல்

இப்பிராந்தியத்தின் வடக்கு எல்லையாக சுக்சி கடலும், ஆர்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான கிழக்கு சைபீரிய கடலும் விளங்குகிறது. கிழக்கில் பெரிங் நீரிணை மற்றும் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான பெரிங் கடலில் உள்ளது. தெற்கில் கம்சாத்கா பிரதேசம் மற்றும் மகதன் ஒப்லாஸ்து மேற்கில் சகா குடியரசு, ஆகியவை உள்ளன. சுக்சி தீபகற்பத்தின் கிழக்கே ரஷ்யா மற்றும் அலாஸ்கா இடையே பெரிங் நீரிணை உள்ளது, சுற்றுசூழல் அடிப்படையில், இப்பகுதியை மூன்று வேறுபட்ட பகுதிகளாகப் பிரிக்கலாம் ஆர்டிக் பனிப்பாலை, மத்திய பனிப்பிரதேசம், தெற்கில் டைகா ஆகும். இந்த பிரதேசத்தில் சுமார் பாதிக்கும் மேலே ஆர்க்டிக் வட்டத்தைச் சேர்ந்தது . இந்த பகுதியில் சுக்கோட்சுகி மலைகள் மற்றும் அனடீர் ரேஞ்ச் போன்ற மலைத்தோடர்களால் நிறந்துள்ளது. இந்த பிராந்தியத்தின் ஆறுகள் அதன் வடக்கு மற்றும் மத்திய மலைகளில் இருந்து தோன்றுகின்றன. முக்கிய ஆறுகள் உள்ளன. இப்பிரதேசத்தின் பெரும் பகுதிகளில் மேற்கு அலாஸ்காவில் உள்ளதை ஒத்த ஆர்க்டிக் தாவரங்களால் நிறந்துள்ளது. அனடீர் வளைகுடா சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஆறு பள்ளத்தாக்குகள் கொண்ட பகுதிகளில் சிறிய இலைகள் கொண்ட மர வகைகளான பைன், பிர்ச், நெட்டிலிங்கம், வில்லோ மரங்கள் வளருகின்றன. தாவரங்களில் 900 இனங்கள் பாசி மற்றும் லிச்சென் போன்றவற்றில் 400 இனங்கள் உட்பட வளருகின்றன. மேலும் 220 பறவை இனங்கள் மற்றும் 30 நன்னீர் மீன் இனங்களை கொண்டுள்ளது.[15]

காலநிலை

இப்பிராந்தியத்தின் காலநிலை இதன் அண்டையில் உள்ள மூன்று கடல்களின் நிலையைப் பொருத்து அமைகிறது. இதன் வானிலையில் தெற்கு காற்று ஈரமானதாகவும், வடக்கிலிருந்து வருவது கடுங் குளிர் காற்றாகவும் வகைப்படுத்தப்பட்டது. இதன் கடலோர பகுதிகளில் வருடத்திற்கு 200 முதல் 400 மிமீ வரை மழை பெய்கிறது. . வெப்பநிலை -15 டிகிரி செல்சியஸ் (5 ° பா) முதல் −35 °செ (−31 °பா) வரை சனவரி மாதங்களில் நிலவுகிறது. +5 °செ (41 °பா) முதல் +14 °செ (57 °பா) வரை சூலை மாத காலகட்டத்தில் வெப்பம் நிலவுகிறது.

வரலாறு

இதன் முதல் குடிகள் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தசைபீரியன் வேட்டைக்காரர்கள் ஆவர். இப்பகுதியில் இருந்தே நில பாலம் வழியாக மனித இடம்பெயர்வு அமெரிக்கா கண்டத்துக்கு நடந்ததாக கருதுகின்றனர்.

பொருளாதாரம்

இப்பிராந்தியத்தில் கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு , நிலக்கரி , தங்கம், டங்ஸ்டன் போன்றவை எடுக்கப்படுகின்றன. ஆனால் கிராமப்புற மக்கள் பிழைப்பு என்பது ஒருவகை கலைமான் மந்தைகள், திமிங்கில வேட்டை , மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றை நம்பியே உள்ளது. நகர்ப்புற மக்கள் சுரங்க , நிர்வாகம், கட்டமைப்பு, கலாச்சார பணி, கல்வி, மருத்துவம், மற்றும் பிற தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.

போக்குவரத்து

இப் பிராந்தியத்தின் போக்குவரத்து என்பது பெரும்பாலும் சாலைவசதியையும், வானூர்திகளையும் நம்பியே உள்ளது. இங்குள்ள முதன்மை வானூர்தி நிலையம் உகோல்னி வானூர்தி நிலையம் ஆகும் இது அனடீர் அருகில் உள்ளது. கடற்கரை பகுதிகளில் கப்பல் போக்குவரத்து கூட நடைபெறுகிறது, ஆனால் ஆண்டில் ஆறுமாதங்கள் பனியினால் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கும்.

மேற்கோள்கள்

  1. Law #45-OZ
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Resolution of December 10, 1930
  5. Charter of Chukotka Autonomous Okrug, Article 16
  6. Charter of Chukotka Autonomous Okrug, Article 40
  7. Official website of Chukotka Autonomous Okrug. Roman Valentinovich Kopin, Governor of Chukotka Autonomous Okrug (உருசிய மொழியில்) Archived பெப்ரவரி 15, 2011 at the Wayback Machine.
  8. Charter of Chukotka Autonomous Okrug, Article 27
  9. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  10. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  11. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  12. Chukotka Autonomous Okrug Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность населения Чукотского автономного округа (உருசிய மொழியில்)
  13. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  14. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  15. WWF International, The Bering Sea Ecoregion, Chukotka's Natural Heritage at a Glance (online versionPDF)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.