கோமி

கோமி குடியரசு ( Komi Republic (உருசியம்: Респу́блика Ко́ми, Respublika Komi; வார்ப்புரு:Lang-kv) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சய்க்த்விகார் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 901,189 ( 2010 கணக்கெடுப்பு ).[8]

கோமி குடியரசு
Komi Republic

Республика Коми (Russian)
Коми Республика (கோமி)
  குடியரசு  

கொடி

சின்னம்
தேசியப் பண்: கோமி குடியரசு தேசிய கீதம்[1]
ஆள்கூறுகள்: 64°17′N 54°28′E
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வடமேற்கு[2]
பொருளாதாரப் பகுதிகள்வடக்கத்திய[3]
அமைக்கப்பட்டதுDecember 5, 1936[4]
தலைநகரம்சைக்கித்யவ்கர்
அரசாங்கம் (January 2014 இல் நிலவரம்)
  குடியரசு தலைவர்[5]Sergey Gaplikov[6]
  சட்டமன்றம்சட்டமன்றம்[5]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
  மொத்தம்415,900 km2 (160,600 sq mi)
பரப்புத் தரம்13வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்9,01,189
  தரம்58வது
  அடர்த்தி[9]2.17/km2 (5.6/sq mi)
  நகர்76.9%
  கிராமம்23.1%
மக்கள் தொகை (சனவரி 2013 est.)
  மொத்தம்8,80,639[10]
உரசிய நேர வலயம்[11]
ISO 3166-2:RURU-KO
அனுமதித் தகடு11
சட்டபூர்வ மொழிஉருசியம்;[12] கோமி[13]
அலுவலக வலைத்தளம்

புவியியல்

கோமிக் குடியரசின் வரைபடம்

குடியரசின் மேற்கே உரால் மலைகள் அமைந்துள்ளது, வடக்கு மற்றும் கிழக்கில் கிழக்கு ஐரோப்பிய சமவெளியும், குடியரசின் 70% வனப்பகுதியும், 15% சதுப்பு நிலப்பகுதியாகவும் உள்ளது.

  • பரப்பளவு: 415.900 சதுர கிலோமீட்டர் (160,600 சதுர மைல்)
  • எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்): வடமேற்கு மற்றும் வடக்கில் நெனெத்து தன்னாட்சி பிராந்தியம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரப் பிரதேசம், தெற்கிலும் தென்மேற்கிலும் கீரோவ் ஒப்லாஸ்து, மேற்கில் ஆர்க்கான்கெலஸ்க் .
  • உயரமான இடம்: நரோட்நயா மலை (1,894 மீ)
  • குடியரசு வடக்கிலிருந்து தெற்காக அதிகபட்சமாக நீளம்→ : 785 கிலோமீட்டர் (488 மைல்)
  • குடியரசு கிழக்கில் இருந்து மேற்காக அதிகபட்ச தொலைவு → : 695 கிலோமீட்டர் (432 மைல்)

இயற்கை வளங்கள்

குடியரசில் உள்ள இயற்கை வளங்கள் நிலக்கரி , கச்சா எண்ணெய்க , இயற்கை எரிவாயு தங்கம் , வைரம், மரம் போன்றவை உள்ளன. இல்கு ஒருவகை கலைமான்கள் மிகுதியாக உள்ளன, சுமார் 32.800 சதுர கிமீ பரப்பளவில் பெரும்பாலும் தைகா காடுகள் பரவியுள்ளன. குடியரசின் வடக்கி்ல் உள்ள உரால் மலைகளை 1995 இல் யுனெஸ்கோ, உலக பாரம்பரிய களம் என்று அங்கீகரித்தது, இதுவே உரசியாவின் முதல் இயற்கை உலக பாரம்பரிய களம், இது ஐரோப்பாவின் மிகப்பரந்த கன்னிக்காடாகவும் உள்ளது .

காலநிலை

குடியரசில் குளிர்காலம் நீண்டதாகவும், குளிர் மிக்கதாகவும் இருக்கும், கோடைக் காலம் குறுகியதாகவும், மிகவும் சூடானதாகவும் இருக்கும்.

  • சராசரி சனவரி வெப்பநிலை: -17 டிகிரி செல்சியஸ் (1 ° பாரங்கீட்) முதல் (தெற்கு பகுதிகளில்) -20 °C (-4 ° பாரங்கீட்) (வடக்கு பகுதிகளில்)வரை நிலவுகிறது.
  • சராசரி சூலை வெப்பநிலை: 11 டிகிரி செல்சியஸ் (52 ° பாரங்கீட்) முதல் (வடக்கு பகுதிகளில்) 15 ° செல்சியஸ் (59 °) (தெற்கு பகுதிகளில்) வரை நிலவுகிறது.
  • குறைவாக பதிவுவான வெப்பநிலை: -58,1 டிகிரி செல்சியஸ் (-72.6 ° பாரங்கீட்) வரை ( உஸ்ட்-ஷச்சுகர் கிராமம் )
  • சராசரி ஆண்டு மழையளவு : 625 மிமீ (24.6 அங்குலம்)

மக்கள் வகைப்பாடு

குடியரசின் மக்கள் தொகை : 901,189 (2010 கணக்கெடுப்பு); 1,018,674 (2002 கணக்கெடுப்பு); 1,261,024 (1989 கணக்கெடுப்பு).

இனக் குழுக்கள்

2010 கணக்கெடுப்பின்படி ,[8] குடியரசில் ரஷ்ய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 65,1% வரை உள்ளனர். கோமி மக்கள் 23.7% மட்டுமே உள்ளனர்.குடியரசில் வாழும் மற்ற இனக்குழுக்கள் உக்ரைனியர்கள் (4.2%), தடார்கள் (1.3%), பெலாரஷ்யர்கள் (1%), பாரம்பரிய ஜேர்மனியர்கள் (0.6%), சுவாஷ் (0.6%),அசீரியர்கள் (0.6%), மற்றும் இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.

மதம்

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[14] கோமி மக்கள் தொகையில் 30.2% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 4% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 1% நாட்டுப்புற மதத்தினர், 1% முஸ்லிம்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 0.4% கத்தோலிக்க திருச்சபையினர் க, 41% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 14% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

அரசியல்

கோமி குடியரசில் அரசாங்கத்தின் தலைவராக குடியரசு தலைவர் உள்ளார். 2010 வரை, குடியரசு தலைவராக வியாசெஸ்லவ் கைசர் இருந்தார். மாநில கவுன்சில் என்னும் சட்டமன்றம் இருக்கிறது.

பொருளாதாரம்

கோமி குடியரசின் முக்கிய தொழிற்துறைகள் எண்ணெய் சுத்திகரிப்பு, மரம், மரப்பொருட்கள், இயற்கை எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி பொன்றவை ஆகும். முக்கிய தொழில்துறை மையங்களாக சய்க்த்தைவ்கார், இண்டா, பிச்சோரா, சொசொனோகிரோஸ்க், உக்காரா, வோர்குடாவில் போன்றவை விளங்குகின்றன.

போக்குவரத்து

குடியரசில் ரெயில் போக்குவரத்து நன்றாக வளர்ந்த நிலையில் உள்ளது. 1997 ஆம் ஆண்டில், மொத்த இரயில் பாதை 1,708 கி.மீ. நீளமும், சாலைகள் 4.677 கி.மீ. நீளமும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Law #XII-20/5
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Komi ASSR. Administrative-Territorial Structure, p. 5
  5. Constitution, Article 8
  6. Official website of the Komi Republic. Sergey Gaplikov (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  8. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  10. Komi Republic Territorial Branch of the Russian Federal State Statistics Service. Оценка численности населения по городам, районам, городским населённым пунктам Республики Коми на 1 января 2012 г., 2013 г. и в среднем за 2012 год (உருசிய மொழியில்)
  11. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  12. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Constitution of the Komi Republic, Article 67
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.