உரால் மலைகள்

உரால் மலைகள் அல்லது யூரல் மலைகள் (Ural Mountains, ரஷ்ய மொழி:Ура́льские го́ры, உரால்ஸ்கியே கோரி) என்பன ரஷ்யாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளூடாக மேற்கு வரை பரந்திருக்கும் மலைத்தொடர் ஆகும். இவை ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் மலைகள் எனவும் அறியப்படுகிறது.

உரால் மலைகள்
உரால் மலைகளின் வரைபடம்

புவியியல்

உரால் மலைகளில் அமைந்துள்ள கொல்கெடான் கிராமம் (1912)

உரால் மலைகள் கசக்ஸ்தானின் வடக்கு எல்லையில் இருந்து 2,500 கிமீ தூரம் ஆர்க்டிக் பெருங்கடலின் கரை வரை படர்ந்துள்ளது. இதன் அதியுயர் புள்ளி நரோத்னயா மலை (1,895 மீ). வடக்கு உராலில் உள்ள வேர்ஜின் கோமி காடுகள் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உரால் மலைகளின் 68 விழுக்காட்டு பகுதி ரஷ்யாவிலும், மீதியான 32 விழுக்காடு கசக்ஸ்தானிலும் அமைந்துள்ளது[1][2].

பெயர்க்காரணம்

உரால் என்பது உராலியப் பழங்குடிகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர்கள் முன்னர் ஆசியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்தவர்கள். உராலியர்கள் பொதுவாக வேட்டையாடுபவர்கள். எனினும், இப்பகுதியின் வளக்குறைவினால் இவர்கள் ஆசியாவின் ஏனைய பகுதிகளுக்கு கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.