சித்தா மாகாணம்

சித்தா மாகாணம் (Chita Oblast, உருசியம்: Чити́нская о́бласть) என்பது உருசியாவின் ஒரு முன்னாள் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் தலைநகர் சித்தா ஆகும். சீனாவுடன் (998 கி.மீ) நீள எல்லையும் மங்கோலியாவுடன் (868 கி.மீ) நீண்ட எல்லையும் கொண்டிருந்தது. அத்துடன் உருசியாவின் இர்கூத்ஸ்க் மாகாணம், அமூர் மாகாணம், புரியாத்தியா குடியரசு, சகா குடியரசு ஆகியனவும் இதன் எல்லைகளாகும். இதன் பரப்பளவு 431,500 சதுரகிமீகள் ஆகும்.

2008 இல் கலைக்கப்படும் முன்னர் உருசியாவில் சித்தா மாகாணத்தின் அமைவிடம்

இம்மாகாணம் 1937 செப்டம்பர் 26 இல் அமைக்கப்பட்டது. பின்னர் 2008 மார்ச் 1 அன்று சபாய்கால்ஸ்கி கிராய் என்ற பெயரில் ஆகின்-புரியாத் தன்னாட்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இந்த மாகாணத்தில் நிறைய இரும்பு, இரும்பல்லா மற்ற கனிமங்களும், அரிதில் கிடைக்கும் கனிமங்களும், விலையுர்ந்த மாழைகளும், கரியும் கிடக்கின்றது. யுரேனியம் மிக்க கனிமங்களும் உள்ளன. இங்கு புதைந்து இருக்கும் யுரேனியம் 145,400 டன் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த ஒப்லாஸ்த்தில் 60% காடுகளாகும். இங்கு உள்ள முக்கிய தொழில்கள், சுரங்கத்தொழில், மாழைத்தொழில்கள், எரிபொருள், மரப்பொருட்கள் பற்றிய தொழிகள் ஆகும். குளிர்மான் (reindeer) வளர்ப்பும் ஆடுமாடுகள் வளர்ப்பும் இங்கு செழிப்பாக நடக்கின்றது.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.