கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா

கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது. இங்கிருக்கும் கஞ்சஞ்சங்கா மலையினால் இந்த பூங்காவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மலைச்சிகரம் 8,586 மீட்டர்கள் (28,169 ft) உயரத்தை உடையது. உலகத்திலேயே உயரமான மூன்றாவது மலைச் சிகரமாக உள்ளது. இந்த பூங்கா 849.5 km2 (328.0 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு ஆகிய விலங்குகள் வாழ்கின்றன.

கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா
அமைவிடம்வடக்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம்
கிட்டிய நகரம்சுங்தங்
ஆள்கூறுகள்27°42′0″N 88°08′0″E
பரப்பளவு1,784 km2 (689 sq mi)
நிறுவப்பட்டது1977
வருகையாளர்கள்NA (in NA)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு

இந்த பூங்கா வடக்கு சிக்கிம் மாவட்டத்திலும், மேற்கு சிக்கிம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

தாவரங்கள்

இங்கு கருவாலி மரம், ஃபிர், மேப்பிள், உள்ளிட்ட தாவரங்களும், மருத்துவ மூலிகைச் செடிகளும் உள்ளன.

விலங்குகள்

இங்கு பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு, செந்நாய், தேன் கரடி, இமாலய கருங்கரடி, சிவப்பு பாண்டா, கண்ணாடி விரியன் உள்ளிட்டவை வாழ்கின்றன.[1]

போக்குவரத்து

இணைப்புகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.