சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)


சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) (Minstry of Environment and Forests), இந்த அமைச்சகமே இந்தியாவின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை கவனிக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்த அமைச்சகம் 1985ல் ஏற்படுத்தப்பட்டது.

வார்ப்புரு:Wildlife of India

இந்த அமைச்சகத்தின் பொறுப்பானது இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களை திட்டமிடுவதும், ஊக்குவிப்பதும், ஒருங்கிணைப்பதும், மேற்பாடுவையிவதாகும். இந்த அமைச்சகத்தின் முக்கியப் பணியானது, இந்திய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதும், பாதுகாப்பது, மேலும் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு; காடு வளர்ப்பு, மற்றும் நில சீரழிவு தணிப்பு ஆகியன்வாகும். இதுவே இந்தியாவின் தேசிய பூங்காக்கள் நிர்வகிக்கும் பொறுப்பு உடையதாகும்.[1]

அகில இந்தியப் பணிச்சேவைகளூள் ஒன்றான, இந்திய வனப் பணி (IFS) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.


முன்னாள் அமைச்சர்கள்

நிறுவனங்கள்

அமைப்பு

  • ஆணையங்கள்
    • மத்திய விலங்கியல் பூங்கா ஆணையம், புது தில்லி, இந்தியா (Central Zoo Authority of India)
    • தேசிய பல்லுயிர் ஆணையம், சென்னை (National Biodiversity Authority)
    • தேசிய கங்கை ஆற்று வடிநில ஆணையம், புது தில்லி (National Ganga River Basin Authority)
    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், புது தில்லி (National Tiger Conservation Authority)
  • சார்புநிலை அலுவலகங்கள்
    • அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் வனங்கள் மற்றும் பெருந்தோட்ட மேம்பாட்டு கழகம் (பொதுத் துறை)
    • இந்தியா விலங்குகள் நல வாரியம், சென்னை (Animal Welfare Board of India)
    • இந்தியா தாவரவியல் கணக்கீடு (BSI), கொல்கத்தா (Botanical Survey of India)
    • மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் (Central Pollution Control Board)
    • வனக் கல்வி இயக்குநரகம் (DfE), டேராடூன் (Directorate of Forest Education)
    • [இந்தியா வன கணக்கீடு]], டேராடூன் (Forest Survey of India)
    • இந்திரா காந்தி தேசிய வன கழகம் (IGNFA), டேராடூன் (Indira Gandhi National Forest Academy)
    • தேசிய காடு வளர்ப்பு மற்றும் சூழல் அபிவிருத்தி சபை (National Afforestation and Eco-Development Board)
    • தேசிய வனவிலங்கு வாரியம் (National Board of Wildlife)
    • தேசிய விலங்கு நல நிறுவனம் (National Institute of Animal Welfare)
    • தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம், புது தில்லி (NMNH), புது தில்லி
    • தேசிய விலங்கியல் பூங்கா (NZP), புது தில்லி
    • இந்தியா விலங்கியல் கணக்கீடு, (ZSI) கொல்கத்தா (Zoological Survey of India)
  • சிறப்பு மையங்கள்
    • சுற்றுச்சூழல் கல்வி மையம், அகமதாபாத் (Centre for Environment Education)
    • முதலுதவி சுற்றுச்சூழல் கல்வி மையம், சென்னை (C. P. R. Environmental Education Centre)
    • விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மையம், பெங்களூர் (Centre for Animals and Environment)
    • சிறப்பு சுற்றுச் சூழல் பொருளாதாரம் மையம், சென்னை (Centre of Excellence in Environmental Economics)
    • உள்ளூர் ஆரோக்கிய வழக்கங்கள் புதுப்பித்தல் அறக்கட்டளை, பெங்களூர்
    • சூழலியல் அறிவியல் மையம், பெங்களூர் (Centre for Ecological Sciences)
    • சிதையும் சுற்றுச்சூழல் மேலாண்மை மையம், பெங்களூர்
    • சுரங்க சுற்றுச்சூழல் மையம், தன்பாத் (Centre for Mining Environment)
    • சலீம் பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON), கோயம்புத்தூர்
    • வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,[2] திருவனந்தபுரம்
  • தன்னாட்சி நிறுவனங்கள்
    • ஜிபிபேண்ட் இமாலய சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி நிறுவனம், அல்மோரா (G. B.Pant Institute of Himalayan Environment and Development)
    • இந்திய வன மேலாண்மை நிறுவனம், போபால்
    • இந்திய ஒட்டுப்பலகை தொழிலக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், பெங்களூர் (Indian Plywood Industries Research and Training Institute)
    • இந்திய சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம், புது தில்லி (Indian Institute of Ecology and Environment)
    • இந்திய வனங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபை டேராடூன், (ICFRE)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.