தேன் கரடி

தேன் கரடி (Sloth bear) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் காடுகளில் காணப்படுகின்ற ஒரு கரடியாகும். இது ஒரு இரவாடி, பூச்சியுண்ணிக் கரடி ஆகும். இலங்கையில் உள்ள கரடி இதன் துணையினமாகக் கருதப்படுகிறது. இந்தக் கரடிக்குத் தலை பெரிதாகவும், முகம் துருத்தியபடி நீண்டு முக்கோணவடிவில் இருக்கும். இதற்குப் பறட்டை போன்ற நீண்ட கரிய முடியும், மார்பில் v வடிவ வெண்ணிற குறியும் கொண்டிருக்கும். கால் பாதங்கள் தட்டையாகவும், விரல்களில் முன்புறம் வளைந்த நீண்ட நகங்களும், இருக்கும். இவற்றின் பாதச்சுவடுகள் மனிதனின் பாதச்சுவடுகள் போல இருக்கும். இது பழங்கள் பூக்கள், வேர்த்தண்டுகள், தேன், எறும்புகள், பறவைகளின் முட்டைகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது.

தேன் கரடி
புதைப்படிவ காலம்:Late Pliocene to Early Pleistocene – Recent
Francois,[1] a sloth bear in captivity at the National Zoo in Washington, D.C.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: கரடி
பேரினம்: Melursus
Meyer, 1793
இனம்: M. ursinus
இருசொற் பெயரீடு
Melursus ursinus
Shaw, 1791
Sloth bear range
(black – former, green – extant)
வேறு பெயர்கள்
  • Melursus lybius Meyer, 1793
  • Bradypus ursinus Shaw, 1791

தமிழில் இதனை அசையாக் கரடி என்பர். இதன் கால்களில் மூன்று விரல்கள் இருக்கும். இது சோம்பேறித்தனம் கொண்டது. மரத்தில் மெதுவாக ஏறும்; இறங்கும். வாழ்நாளில் பெரும்பகுதியை மரக்கிளைகளில் தூங்கியே கழிக்கும். உண்ட உணவு செரிமானம் ஆகப் பல மணி நேரம் ஆவதால் இது இவ்வாறு வாழும். [3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.