சிவப்பு பாண்டா

சிவப்பு பாண்டா (Red Panda) (இலத்தீன்: Ailurus fulgens நெருப்பு வண்ணப் பூனை) பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். கரடிப் பூனை அல்லது ஃபயர்ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இது சிக்கிமின் மாநில விலங்காகும்.

சிவப்பு பாண்டா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கனம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
துணைவகுப்பு: Eutheria
பெருவரிசை: Laurasiatheria
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: Caniformia
பெருங்குடும்பம்: Musteloidea
குடும்பம்: Ailuridae
பேரினம்: Ailurus
இனம்: A. fulgens
இருசொற் பெயரீடு
Ailurus fulgens
F. Cuvier, 1825
subspecies
  • A. fulgens fulgens
  • A. fulgens refulgens
  • A. fulgens styani
சிவப்பு பாண்டாவின் பரவல்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.