மேப்பிள்

ஏசர் அல்லது மேப்பிள் (தமிழ்: மேப்பிள்ளை, மேப்பம், மேம்பு) மர அல்லது புதர் வகையான ஒரு பேரினமாகும்.128 வகை இனங்கள் இப்பேரினத்தில் உள்ளன. இவ்வினங்களுக்குப் பிறப்பிடமாக ஆசியாவைக் கருதுகின்றனர். மேப்பிள் மரங்கள் ஆசியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. புவியின் தென்பாதி கோளத்தில் 40 மீ உயரம் வளரும் ஏசர் இலாரினம் (Acer laurinum) என்னும் ஒரேயொரு இனம் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக மேப்பிள் மரங்கள் 10-40 மீ உயரம் வளரக்கூடியவை மேப்பிள் மரத்தில் ஒருவகையான இனிப்புநீர் சுரக்கின்றது. இது பெரும்பாலும் பிப்பிரவரி, மார்ச்சு மாதங்களில் நிகழும். இதனை அடிமரத்தில் துளையிட்டு வடியச்செய்து காய்ச்சி ஓர் இனிப்பு குடிநீர்மமாகப் பயன்படுத்துகின்றனர். மேபிள் மரம் பல வகை தளபாடங்கள் செய்ய பயன்படுகிறது. மேபிள் இலை கனடா நாட்டின் கொடிச் சின்னமாகும்.

மேப்பிள்
சிக்கமோர் மேப்பிள் (Acer pseudoplatanus இலை
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத்
தாவரம்
தரப்படுத்தப்படாத: உரோசிதுகள்
வரிசை: சப்பின்டேலசு
(Sapindales)
குடும்பம்: சப்பின்டேசியே
(Sapindaceae)
பேரினம்: ஏசர்
(கரோலசு இலின்னேயசு)
இனங்கள்

See ஏசர் இனங்களின் பட்டியல்

மேப்ப
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.