பன்னா தேசியப் பூங்கா

பன்னா தேசிய பூங்கா இந்தியாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பன்னா மாவட்டம் மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இதன் பரப்பளவு 542.67 km2 (209.53 sq mi) ஆகும். இது 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் இருபத்திரண்டாவது புலிகள் சரணாலயமாகவும். மத்தியப் பிரதேசத்தின் ஐந்தாவது சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது.[1] இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தினால், பன்னா தேசியப் பூங்காவிற்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக 2007 ல் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 2009ல், மொத்தப் புலிகளின் எண்ணிக்கையும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் வேட்டை மூலம் அகற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]

பன்னா தேசியப் பூங்கா
அமைவிடம்மத்தியப்பிரதேசம், இந்தியா
கிட்டிய நகரம்பன்னா, கஜுராஹோ (25 km (16 mi))
ஆள்கூறுகள்24°43′49.60″N 80°0′36.80″E
பரப்பளவு542.67
நிறுவப்பட்டது1981
வருகையாளர்கள்22,563 (in 2009)
நிருவாக அமைப்புஇந்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், புலிகள் பாதுகாப்புத் திட்டம்
பன்னா தேசியப் பூங்காவின் வரைபடம்

சான்றுகள்

  1. "பன்னா தேசியப் பூங்கா". பார்த்த நாள் செப்டம்பர் 5, 2015.
  2. "பன்னா தேசியப் பூங்கா புலிகள் அழிப்பு". பார்த்த நாள் செப்டம்பர் 5, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.