அமெரிக்க சமோவா

அமெரிக்க சமோவா தெற்கு பசிபிக் பெருங்கடலில் சுதந்திர நாடான சாமோவாவுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உள்ளிணைக்கப்படாத ஆட்சிப் பகுதியாகும். இதன் முக்கிய தீவு துதுய்லா வாகும் இதனோடு மனுவா, ரோஸ் பவளத்தீவுகள், சுவானிஸ் தீவுகள் என்பனவும் இவ்வாட்சிப் பகுதியில் அடங்குகின்றன. குக் தீவுகளுக்கு மேற்காகவும், டொங்காவுக்கு வடக்காகவும் டொகெலாவுவில் இருந்து சுமார் 300 மைல் (500 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ள அமெரிக்க சமோவா,சமோவா தீவுத் தொடரின் ஒரு பகுதியாகும். அமெரிக்க சமோவாவுக்கு மேற்கில் வலிசு-புடானா தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பீட்டின் படி ஆட்சிப் பகுதியின் மொத்த 200.22சதுர கிலோமீட்டர் பரப்பில் 57,291பேர் வசிக்கின்றார்கள்.[1]

அமெரிக்க சமோவா
Amerika Sāmoa/Sāmoa Amelika
கொடி சின்னம்
குறிக்கோள்: "Samoa, Muamua Le Atua"  (சமோவாவிய மொழி)
"சமோவாவே, கடவுளை முதன்மைப் படுத்து"
நாட்டுப்பண்: The Star-Spangled Banner, Amerika Samoa
Location of அமெரிக்க சமோவாவின்
தலைநகரம்பாகோ பாகோ
ஆட்சி மொழி(கள்) ஆங்கில மொழி, சமோவாவிய மொழி
Government
   ஆளுனர் டொகியொலா டுலஃபொனொ
ஐக்கிய அமெரிக்காவின் உள்ளிணைக்கப்படாத ஆட்சிப் பகுதி
   பேர்லின் ஒப்பந்தம் 1899 
   Deed of Cession of Tutuila
1900 
   Deed of Cession of Manuʻa
1904 
பரப்பு
   மொத்தம் 199 கிமீ2 (212வது)
76.83 சதுர மைல்
   நீர் (%) 0
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 64,869 (204வது)
   2000 கணக்கெடுப்பு 57,291
நாணயம் அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம் (ஒ.அ.நே-11)
   கோடை (ப.சே) பயன்பாட்டில் இல்லை (ஒ.அ.நே)
அழைப்புக்குறி 1 684
இணையக் குறி .as

மேற்கோள்கள்

14.3°S 170.7°W / -14.3; -170.7


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.