பி. வி. நரசிம்மபாரதி
பி. வி. நரசிம்ம பாரதி (மார்ச் 23, 1924 - 11 மே 1978)[1] சௌராட்டிர சமூகத்திலிருந்து நடிப்புத்துறைக்கு வந்த கலைஞர். 1947-இல் கன்னிகா திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தனது நண்பரான பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜனுக்கு தான் நடித்த படங்களில் பின்னணி பாட, இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிடம் பரிந்துரை செய்து வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.[2][3]
பி. வி. நரசிம்ம பாரதி | |
---|---|
![]() அபிமன்யு (1948) திரைப்படத்தில் நரசிம்ம பாரதி | |
பிறப்பு | மார்ச்சு 23, 1924 மதுரை, இந்தியா |
இறப்பு | மே 11, 1978 54) சென்னை, தமிழ்நாடு | (அகவை
அறியப்படுவது | நாடக, திரைப்பட நடிகர் |
வாழ்க்கைக் குறிப்பு
மதுரையைச் சேர்ந்த நரசிம்ம பாரதி சிறு வயதிலேயே நடிப்புத் திறமையைக் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே சௌராட்டிர சபையில் சேர்ந்து அவர்கள் நடத்தி வந்த நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு பாரதி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[4] பின்னர் வெள்ளியங்குன்றம் ஜமீந்தார் ஆரம்பித்த பாய்ஸ் கம்பனியின் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார்.[4] இதன் பின்னர் புளியமாநகர் பி. எஸ். சுப்பா ரெட்டியாரின் கம்பனியில் சேர்ந்து மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். உலகப் போர் ஆரம்பித்த போது மலேயாவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட கடைசிக் கப்பலில் நரசிம்ம பாரதியும் சேர்ந்து இந்தியா வந்து சேர்ந்தார்.[4]
திரைப்படங்களில் நடிப்பு
இந்தியா திரும்பிய பின்னர் பக்த மீராவில் (1945) சாது வேடத்தில் நடித்தார்.[4] ஜுப்பிட்டர் பிக்சர்சின் ஏ. எஸ். ஏ. சாமி இவருக்குத் தனது படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார். வால்மீகி திரைப்படத்தில் விட்டுணு, ராமன், வேடன் ஆகிய பாத்திரங்களிலும், ஸ்ரீ முருகனில் (1946) விட்டுணுவாகவும், கஞ்சன் படத்தில் குமாரசாமியாகவும், கன்னிகா (1947) படத்தில் நாரதராகவும் நடித்தார்.[4] இதன் பின்னர் நடித்த அபிமன்யுவில் (1948) கிருஷ்ணனாக நடித்தும் புகழ் பெற்றார்.[4] கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்திலும் கிருஷ்ணனாக நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1947 | கன்னிகா |
1948 | அபிமன்யு |
1950 | கிருஷ்ண விஜயம் |
1950 | திகம்பர சாமியார் |
1950 | பொன்முடி |
1952 | என் தங்கை |
1952 | மாப்பிள்ளை |
1952 | சின்னத்துரை |
1953 | மதன மோகினி |
1953 | முயற்சி |
1953 | திரும்பிப்பார் |
1954 | புதுயுகம் |
1956 | குடும்பவிளக்கு |
1958 | சம்பூர்ண ராமாயணம் |
1960 | நான் கண்ட சொர்க்கம் |
1960 | தோழன் |
மேற்கோள்கள்
- "மறக்கப்பட்ட நடிகர்கள்" (Tamil). தி இந்து. பார்த்த நாள் 3 October 2016.
- Guy, Randor (3 October 2008). "Blast from the Past - Ponmudi 1950". தி இந்து. http://www.hindu.com/cp/2008/10/03/stories/2008100350341600.htm. பார்த்த நாள்: 2011-11-27.
- http://antrukandamugam.wordpress.com/2013/11/30/p-v-narasimha-bharathi/
- ராஜா (ஆகத்து 1948). "நரசிம்ம பாரதி". பேசும் படம்: பக். 16.
வெளி இணைப்புகள்
- http://www.omnilexica.com/?q=p.+v.+narasimha+bharathi+(actor)
- http://entertainment.oneindia.in/celebs/p-v-narasimha-bharathi.html