அனிதா ரத்னம்

அனிதா ரத்னம் (பிறப்பு: மே 21, 1954) தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி, நியோ பாரத் நாட்டியம் எனப் பெயரிட்டுள்ளார்[1][2][3]. இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(2000),பாய்ஸ்(2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அனிதா ரத்னம்
அனிதா ரத்னம் (2012)
பிறப்பு21 மே 1954 (1954-05-21)
மதுரை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
கல்விகலாசேத்திரா
பணிநடனக் கலைஞர், நடன இயக்குநர்
அறியப்படுவதுஇயக்குநர், அரங்கம் இண்டரக்டிவ் (Arangham Interactive), சென்னை
வலைத்தளம்
www.anitaratnam.com

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.