சசிகுமார் (இயக்குநர்)

சசிகுமார் (பிறப்பு: செப்டம்பர் 28, 1974) [1] தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.[2]

சசிகுமார்
பிறப்பு28 செப்டம்பர் 1974 (1974-09-28)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஇயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்
சமயம்இந்து

இளமைக்காலம்

சசிகுமார் கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாகப் படிப்பை படித்து முடித்தார். அவர் 20 வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிந்தார், அவர் சேது(1999) படத்தை தயாரித்தவர். சசிகுமார் இந்த படத்திற்கான உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அங்கு அவர் அமீரிடம் அறிமுகமானார், மேலும் அவருக்காக ஒரு பெயரை உருவாக்கவும் உதவினார். அவர் மௌனம் பேசியதே(2002) மற்றும் ராம்(2005) படத்தில் இயக்குனர் அமீருக்கு உதவினார். அமீரின் பருத்திவீரன்(2007) இன் ஆரம்ப கட்டங்களில் அவர் சுப்பிரமணியபுரம் படத்திற்கான தனது அடித்தளத்தைத் தொடங்கினார்.[3]

இயக்கிய திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

வருடம்திரைப்படம்மொழிமேலும் விவரம்
2008சுப்பிரமணியபுரம்தமிழ்சிறந்த படத்துக்கான ஃபில்ம்பேர் விருது
சிறந்த படத்துக்கான விஜய் விருது
Nominated, Vijay Award for Favourite Film
2009பசங்கதமிழ்சிறந்த படத்துக்கான விஜுஅய் விருதுக்காகப் பரிந்துரைப்பு

நடித்த திரைப்படங்கள்

வருடம்திரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2008சுப்பிரமணியபுரம்பரமன்தமிழ்
2009நாடோடிகள்கருணாதமிழ்
2010சம்போ சிவ சம்போதெலுங்குசிறப்புத் தோற்றம்
2010போராளிஇளங்குமரன்தமிழ்
2012சுந்தர பாண்டியன்சுந்தர பாண்டியன்தமிழ்
2015தாரை தப்பட்டைதமிழ்
2016வெற்றிவேல்வெற்றிவேல்தமிழ்

மேற்கோள்கள்

  1. "சசிகுமார் வாழ்க்கை வரலாறு".
  2. https://www.filmibeat.com/celebs/sasikumar-tamil.html
  3. http://www.goprofile.in/2017/06/M-Sasikumar-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography-movies-list.html?m=1
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.