பரவை முனியம்மா
பரவை முனியம்மா (பிறப்பு: 1943) தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார்.
பரவை முனியம்மா | |
---|---|
![]() பரவை முனியம்மாளுடன் தேனி.எம்.சுப்பிரமணி மற்றும் சிலர் | |
பிறப்பு | முனியம்மா கருப்பையா![]() |
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார்.
திரைப்படத் துறை
தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.[1] காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
- தூள் (திரைப்படம்)
- காதல் சடுகுடு (திரைப்படம்)
- தேவதையைக் கண்டேன்
- ஏய்
- ஜெய் சூர்யா
- கண்ணாடிப் பூக்கள்
- தக திமி தா
- நெஞ்சில் ஜில் ஜில்l
- நாகரீக கோமாளி
- கை வந்த கலை
- சுயேச்சை எம். எல். ஏ
- பசுபதி c/o ராசக்காப்பாளையம்
- சண்டை
- பூ
- தோரனை
- ராஜாதி ராஜா
- தமிழ் படம் (திரைப்படம்)
- மகனே என் மருமகனே
- போக்கிரி ராஜா - மலையாளம்
- பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)
- வேங்கை (திரைப்படம்)
- வெளுத்துக் கட்டு
- காசேதான் கடவுளடா
- வீரம் (திரைப்படம்)
- மான் கராத்தே
தொலைக்காட்சித் தொடர்
கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.[2][3]
பிற நிகழ்ச்சிகள்
மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன.[4]
நிதி உதவி
பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.[5]
மேற்கோள்கள்
- http://hindu.com/thehindu/mp/2004/01/21/stories/2004012100210300.htm
- http://www.behindwoods.com/News/28-3-05/paravaimunniyama.htm
- http://www.hindu.com/mp/2004/12/04/stories/2004120400290300.htm
- http://www.hindu.com/mp/2007/07/30/stories/2007073050840300.htm
- மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு