மான் கராத்தே

மான் கராத்தே 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமகும். இத் திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவ கார்த்திகேயனும், ஹன்சிகா மோட்வானியும், சூரியும், வம்சி கிருஷ்ணாவும், சதீஸும் எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியானது.

மான் கராத்தே
இயக்கம்திருக்குமரன்
தயாரிப்புபி. மதன்
திரைக்கதைதிருக்குமரன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன்
ஹன்சிகா மோட்வானி
சூரி
வம்சி கிருஷ்ணா
சதீஸ்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புஅஸ்வின்
கலையகம்எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிச்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 4, 2014 (2014-04-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி
(US$2.12 மில்லியன்)
மொத்த வருவாய்600 மில்லியன்
(US$8.46 மில்லியன்)
[1]

கதைச் சுருக்கம்

தனது நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு சந்தோசமாக சுற்றுலாப்பயணம் போகிறார் சதீஷ். போன இடத்தில் சக்தி வாய்ந்த சித்தர் ஒருவர் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்பட, விளையாட்டாக அவரிடம் வரம் கேட்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு வரம் தருவதாக சித்தர் ஒப்புக்கொள்ள, ‘ஆயுத பூஜை’க்கு மறுநாள் தினத்தந்தி பேப்பர் வேணும் என சதீஷ் சித்தரை சீண்டிப் பார்க்கிறார். ஆனால் தனது மந்திர சக்தியால் உண்மையிலேயே பேப்பரை கையில் கொடுத்துவிட்டு மறைந்து போகிறார் சித்தர்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த பேப்பரில் என ஆவலாக புரட்டிப் பார்க்க, பாக்ஸிங்கில் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கும் பீட்டர் என்பவர், அதற்குக் காரணம் என சதீஷையும், அவரின் நண்பர்களின் பெயர்களையும் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது அந்த பேப்பரில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த செய்தியை நம்பாத அவர்கள், அந்த பேப்பரில் இருக்கும் ஒவ்வொரு விஷயமாக நடக்கத் தொடங்க, இரண்டு கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன்தான். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயனை நம்பி, அவரை பாக்ஸராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் சதீஷ் அன் கோ. எப்படியும் ஹீரோதான் ஜெயிக்கப் போகிறார் என்பது தெரியும். ஆனால், அவரை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள்? என்பதுதான் கதை.

நடிகர்கள்

இசை மற்றும் பாடல்கள்

எண் தலைப்புபாடலாசிரியர்Singer(s) நீளம்
1. "மாஞ்சா"  மதன் கார்க்கிஅனிருத் ரவிச்சந்திரன் 4:44
2. "டார்லிங் டம்பக்கு"  யுகபாரதிபென்னி தயாள், சுனிதி சௌஹான் 4:10
3. "உன் விழிகளில்"  ஆர்.டி.ராஜாஅனிருத் ரவிச்சந்திரன், சுருதி ஹாசன் 4:04
4. "ராயபுரம் பீட்டரு"  ஆர்.டி.ராஜாசிவகார்த்திகேயன், பரவை முனியம்மா 3:37
5. "ஓப்பன் த டாஸ்மாக்"  கானா பாலாதேவா, அனிருத் ரவிச்சந்திரன் 4:06
6. "டார்லிங் டம்பக்கு"  யுகபாரதிநிவாஸ், கல்பனா 4:11
மொத்த நீளம்:
24:52

வெளி இணைப்புகள்

  1. http://www.indianmoviestats.com/tamil/kollywood-2014/maan-karate.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.