ஜார்ஜ் டவுன், பினாங்கு
ஜோர்ஜ் டவுன் அல்லது டவுன் [1] மலேசியாவி்ல் உள்ள பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும்.[2] இதற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக ஜோர்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது, இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்ட மூலையில் அமைந்துள்ளது. உள் மாநகரில் சுமார் 740,200 பேர் வசிக்கிரார்கள். ஜோர்ஜ் டவுன் மாநகரக்கூட்டம் என அழைக்கப்படும் ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதியில் ஜோர்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகள், பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் செர்டாங் நகரங்கள் உள்ளன. இங்கு சுமார் 2,500,000 பேர் வசிக்கிறார்கள். இந்தப் பெருநகர பகுதி மலேசியாவி்ன் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும்.[3] இதன் உள் நகரம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகும்.
ஜோர்ஜ் டவுன் மாநகரம் டவுன் | |
---|---|
மாநிலத் தலைநகரம் | |
அடைபெயர்(கள்): முதல் நகரம் | |
குறிக்கோளுரை: "முன்னணி பணியாற்றள்" | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
ஜோர்ஜ் டவுன் நகராட்சி | 1857 |
ஜோர்ஜ் டவுன் மாநகராட்சி | 1957 |
பினாங்கு தீவு நகராட்சி | 1976 |
பினாங்கு தீவு மாநகராட்சி | 2015 |
அரசு | |
• பினாங்கு தீவு மாநகராட்சி மேயர் | ஆஜாபாட்டாயா ஸ்ம்மாய்யீள் |
பரப்பளவு | |
• மாநிலத் தலைநகரம் | 305 |
• Metro | 27,48,000 |
ஏற்றம் | 4.1 |
மக்கள்தொகை (2010) | |
• மாநிலத் தலைநகரம் | 7,40,200 |
• அடர்த்தி | 4,299 |
• பெருநகர் | 22,50,000 |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | - (ஒசநே) |
வரலாறு


ஜோர்ஜ் டவுன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு வியாபாரியான பிரான்சிஸ் லைட்டால் 1 ஆகஸ்ட் 1786 ல் நிறுவப்பட்டது. பின் நகரின் வடக்கு கிழக்கு மூலையில் கார்ன்வாலிசு கோட்டை கட்டப்பட்டது. பின் அது வளர்ந்து வரும் ஒரு வணிக நகராக மாறியது. கடற்கரை வீதீ, மலபார் வீதீ, பிட் வீதீ உருவாக்கப்பட்டு வணிக கட்டிடங்கள் முளைத்தன. கடற்கரை வீதி தெற்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் மொத்த விற்பனையாளர்கள் இதில் துறைமுக நடவடிக்கைகள் தொடர்பான வங்கி மற்றும் வர்த்தக பகுதிகளில் பிரிக்கப்பட்டது . இது 2008 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஒரு உலக பாரம்பரிய தளம் என பட்டியலிடப்பட்டுள்ளது.19 ஆம் நூற்றாண்டின் போது கடற்கரை வீதி வடக்கு பகுதியில் மற்றும் ஐரோப்பிய எம்போரியம் மற்றும் இறக்குமதி வணிக விற்பனை கடைகளில் அமைந்தன.[1]
ஆட்சி முறை
1857, ஜோர்ஜ் டவுன் மலாயா கூட்டமைப்பின் முதல் நகராட்சியானது. ஜனவரி 1957 1 ம் தேதி மாட்சிமை தங்கிய ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் அரசி, ஜோர்ஜ் டவுனை மாநகராட்சியாக மாற்றினார். 1965 ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசிய மோதல் விளைவாக உள்ளூர் தேர்தல்கள் நிறுத்தப்பட்டது.1966 ஆம் ஆண்டு மாநகர சபை செயல்பாடுகளை பினாங்கு முதலமைச்சர் கீழ் மாற்றப்பட்டது. 1974 ஆம் ஆண்டில், ஒரு உள்ளூராட்சி மேலாண்மை வாரியம் அமைக்கபட்டு 1976 ல் ஜோர்ஜ் டவுன், பினாங்கு தீவு நகராட்சியின் கீழ் வந்தது. 2015 ல் ஜோர்ஜ் டவுன், பினாங்கு தீவு மாநகராட்சியின் கீழ் வந்தது.
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம்
பாராளுமன்றத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் பிரதிநிதிகள் பட்டியல்
பாராளுமன்றம் | தொகுதி | பாராளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
பி.048 | கொடி மலை | சய்ரீல் ஜோகாரி | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | தஞ்ஞோங் | ங் வேய் ஆய்க் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | ஜெலுத்தோங் | ஒய் சுவான் ஆன் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | புக்கிட் குளுகோர் | ராம் கர்பால் சிங் | ஜனநாயக செயல் கட்சி |
சட்டமன்றத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் பிரதிநிதிகள் பட்டியல்
Parliament | சட்டமன்றம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
பி.048 | என்.22 | தஞ்சோங் புங்ஙா | தே ஈ சியாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.048 | என்.23 | தண்ணீர் மலை | லிம் குவான் எங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.048 | என்24 | கெபுன் புங்ஙா | சியா கா பெங் | மக்கள் நீதிக் கட்சி |
பி.048 | என்.25 | பூலாவ் தீகுஸ் | யாப் சூ ஹ்யூ | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.26 | படாங் கோதா | சோவ் கோன் யாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.27 | பங்களான் கோதா | லாவ் கெங் ஈ | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.28 | கொம்டார் | தே லாய் ஹெங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.29 | டத்தோ கிராமாட் | ஜக்டீப் சிங் டியோ | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.30 | சுங்கை பினாங் | லிம் சியு கிம் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.31 | பத்து லன்சாங் | லாவ் ஹெங் கியாங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.32 | சிரி டெலிமா | நேதாஜி ராயர் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.33 | ஆயர் ஈதாம் | வோங் அன் வாய் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.34 | பாயா தெருபோங் | யோ சுன் இன் | ஜனநாயக செயல் கட்சி |
யுனெஸ்கோ உலக பாரம்பரிய களம்
ஜூலை 7, 2008 அன்று, ஜோர்ஜ் டவுன் மலாக்கா, உடன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கிகரிக்கப்பட்டது.[4]
ஜோர்ஜ் டவுன் மற்றும் மலாக்கா மலாக்கா நீரனை வரலாற்று நகரங்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாசாரம் |
ஒப்பளவு | ii, iii, iv |
உசாத்துணை | 1223 |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2008 (32nd தொடர்) |
போக்குவரத்து


எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்குப் பேருந்துகள்
கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.
துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை
இது நகரத்தையும் பினாங்கு சர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மூலம், விமான நிலையத்தை 30 நிமிடங்களிள் அடையளாம்.
பினாங்கு பாலம்
பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
பினாங்கு இரண்டாவது பாலம்
பினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது.இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEN, ஐசிஏஓ: WMKP), முன்பு பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.
ராபிட் பெனாங்
ராபிட் பெனாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை அதன் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கிறது. ராபிட் பெனாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.
எக்ஸ்பிரஸ் பேருந்துகள்
சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது ஜோர்ஜ் டவுன் மாநகரை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.
பினாங்கு படகு சேவை
1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இணைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.
வானளாவிகள்
கொம்டார் கோபுரம்
கொம்டார் கோபுரம் இது ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்கள்
- கர்னீ பிளாசா
- கர்னீ பாராகான்
- குவின்ஸ்பே மால்
- அய்ளன் பிளாசா
- பீராங்கின் மால்
- 1வது அவென்யூ
- பார்க்சன் கிராண்ட்
- பினாங்கு டைம்ஸ் சதுக்கம்
- மிட்லாண்ட்ஸ் பார்க் மையம்
- டெஸ்கோ ஜெலுத்தோங்
- டெஸ்கோ தஞ்சோங் பீனாங்
விளையாட்டு
- மாநகர விளையாட்டு அரங்கம்
மருத்துவ வசதி
- பெரிய மருத்துவமனை
- தீவு சிறப்பு மருத்துவமனை
- Pantai Mutiara சிறப்புமருத்துவமனை
- லோஹ் குவான் சிறப்பு மருத்துவமனை
- லாம் வாஹ் ஈ சிறப்பு மருத்துவமனை
- அட்வெண்டிஸ்டான் சிறப்பு மருத்துவமனை
- தஞ்சோங் சிறப்பு மருத்துவமனை
- மவுண்ட் மிரியம் சிறப்பு மருத்துவமனை
- டிராபிகானா சிறப்பு மருத்துவமனை
கல்வி
ஆங்கில பள்ளிகள்
- பினாங்கு பிறி பள்ளி, நாட்டின் மிக பழமையான ஆங்கிலம் பள்ளி
- செயின்ட் சேவியர் பள்ளி, தென் கிழக்கு ஆசியாவில் மிக பழமையான கத்தோலிக்க பள்ளி
- மெத்தடிஸ்ட் பாய்ஸ் 'பள்ளி
- கான்வென்ட் கிரின் லேன்
- கான்வென்ட் ஜோர்ஜ் டவுன்
- செயின்ட் ஜோர்ஜ் பெண்கள் பள்ளி
- கான்வென்ட் பூலாவ் தீகுஸ் பள்ளி
லிட்டில் இந்தியா
லிட்டில் இந்தியா, இது மாநகரின் ராணி வீதி, சூலியா வீதி, மற்றும் சந்தை வீதியில் அமைந்திருக்கும் தமிழர் வனிகப்பகுதியாகும்.மலேசியாவின் பழமையான இந்து கோவிலான அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
பினாங்கு தைப்பூசம்
ஜோர்ஜ் டவுன் அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.
சித்ரா பவுர்ணமி
1970 களின் தொடக்கத்திலிருந்து இந்த திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் நடைபெறும்.
சகோதர நகரங்கள்
வரைபடங்கள்
- பினாங்கின் வரைபடத்தில் ஜோர்ஜ் டவுன் நகரம்
- மலேசியாவின் வரைபடத்தில் ஜோர்ஜ் டவுன் நகரம்
பட தொகுப்பு
- அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்
- இரவில் ஜோர்ஜ் டவுன் மாநகர வான்வழி காட்சி
- ஜோர்ஜ் டவுன் மாநகரின் ஒரு பகுதி
- ஜோர்ஜ் டவுன் மாநகர வான்வழி காட்சி
- பினாங்கு சாலை
- கடற்கரை சாலை
- கொன்வல்ச் கோட்டை
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "History of Penang". பார்த்த நாள் 2009-05-17.
- "Penang Info > History". பார்த்த நாள் 2009-05-17.
- "Population Distribution and Basic Demographic Characteristics, 2010". Department of Statistics, Malaysia. பார்த்த நாள் 19 April 2012.
- "Eight new sites, from the Straits of Malacca, to Papua New Guinea and San Marino, added to UNESCO’s World Heritage List" (July 7, 2008). பார்த்த நாள் 2010-01-06.
- SJKT Ramakrishna. Facebook. Retrieved on 2013-09-27.
- Tamil school data – Penang |. Mynadi.wordpress.com. Retrieved on 2013-09-27.
- KDU College Malaysia, Penang Campus. Kdupg.edu.my (2013-06-05). Retrieved on 2013-09-27.
- SEGi College Penang | SEGi University. Segi.edu.my. Retrieved on 2013-09-27.
- Georgetown. Adelaidecitycouncil.com. Retrieved on 2011-08-11.
- Penang Bridge International Marathon official visit to Xiamen Marathon | Penang – Hotels, Resorts, Entertainment & Events. . Retrieved on 2011-08-11.
- . The Star Online. Retrieved on 2012-08-19.
- http://www.pemkomedan.go.id/news_detail.php?id=106 MEDAN MENJALIN HUBUNGAN KOTA KEMBAR KEEMPAT Retrieved September 10, 2013 Archived 23 April 2007
- Xiamen, Penang and Adelaide as Sister cities – What's On Xiamen. Whatsonxiamen.com (9 May 2007). Retrieved on 2011-08-11.
- Malaysia: Taipei, Georgetown ink friendship memorandum – Taiwan News Onli.com.tw (29 March 2011). Retrieved on 2011-08-11.
- "Taipei – International Sister Cities". Taipei City Council. மூல முகவரியிலிருந்து 2012-11-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-08-23.
- .CM Lim Guan Eng official facebook page (4 April 2012). Retrieved on 2012-04-06.