பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEN, ஐசிஏஓ: WMKP), முன்பு பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
Lapangan Terbang Antarabangsa Pulau Pinang
விமான நிலையம்
ஐஏடிஏ: PENஐசிஏஓ: WMKP
WMO: 48601
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
உரிமையாளர் மலேசிய அரசு
இயக்குனர் Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவது பினாங்கு, மலேசியா
அமைவிடம் Bayan Lepas, பினாங்கு, மேற்கு மலேசியா
மையம்
உயரம் AMSL 11 ft / 3 m
ஆள்கூறுகள் 05°17′50″N 100°16′36″E
நிலப்படம்
PEN/WMKP
மலேசியத் தீபகற்பம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
04/22 3 10,997 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014)
பயணிகள் 6.
Airfreight (tonnes) 141.
விமான நகர்வுகள் 65.
Source: official web site[1]
AIP Malaysia[2]

2013ல், 5.48 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். 60,020 விமான நகர்வுகளை பதிவுசெய்துள்ளது.[1] கோலாலம்பூர், கோதா கினபாலு பன்னாட்டு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக நாட்டின் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் மூன்றாவதாக உள்ளது மேலும் பன்னாட்டு பயணிகள் மற்றும் சரக்கு சேவையில் கோலாலம்பூருக்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது.

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களான ஃபயர்பிளை மற்றும் ஏர்ஆசியா விமான நிறுவனங்களின் கூடுதுறையாக (hub) உள்ளது.[3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.