கொம்டார் கோபுரம்
கொம்டார் கோபுரம் அல்லது காம்ப்ளக்ஸ் துன் ரசாக் (Komtar Tower) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் உயரமான கோபுரம் ஆகும். ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இது 1988 ல் கோலாலம்பூரில் உள்ள மேபேங்க் கோபுரத்தால் முறியடிக்கப்பட்டது. கொம்டார் கோபுரம் 3 ஆண்டுகளுக்கு மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.
கொம்டார் கோபுரம் | |
---|---|
மாற்றுப் பெயர்கள் | காம்ப்ளக்ஸ் துன் ரசாக் |
பொதுவான தகவல்கள் | |
வகை | சில்லறை விற்பனை போக்குவரத்து மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் |
இடம் | ஜோர்ஜ் டவுன், பினாங்கு , மலேசியா |
ஆள்கூற்று | 5.4145°N 100.3292°E |
கட்டுமான ஆரம்பம் | 1974 |
நிறைவுற்றது | 1986 |
செலவு | 207 மில்லியன் |
நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 65 |
தளப்பரப்பு | 71,080 m2 (765,100 sq ft) |
கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது. கொம்டார் என்பது காம்ப்ளக்ஸ் துன் அப்துல் ரசாக்-இன் சுருக்கம். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன்னின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.