பத்து காவான்
பத்து காவான் (ஆங்கிலம்), மலாய்: Batu Kawan) மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரம் ஆகும். அது தவிர, பத்து காவானை, பினாங்கின் பாயான் லெபாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகராக மாற்றப் பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஜோர்ஜ் டவுன் தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் பத்து காவானை, ஜோர்ஜ் டவுனின் துணைநகராக்க பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பத்து காவான் Batu Kawan 峇都交湾 | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | கஸ்தூரி பட்டு |
ஏற்றம் | 4.1 |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | - (ஒசநே) |
இராமசாமி பழனிச்சாமி
பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி ஜனநாயக செயல் கட்சியின் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2008 மலேசிய பொதுத் தேர்தலில் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் இவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூனைத் தோற்கடித்தார்.[1]
கஸ்தூரி பட்டு
2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடவில்லை. இம்முறை ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப்பெண் உறுப்பினர் ஆவார்.
பினாங்கு இரண்டாவது பாலம்
பினாங்கு இரண்டாவது பாலம், பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- "Malaysia Decides 2008". The Star (மலேசியா). பார்த்த நாள் 20 December 2009.