பினாங்கு இரண்டாவது பாலம்
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் (Sultan Abdul Halim Muadzam Shah Bridge) அல்லது பினாங்கு இரண்டாவது பாலம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.[1]
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் (பினாங்கு இரண்டாவது பாலம்) | |
---|---|
![]() | |
பினாங்கு இரண்டாவது பாலம் | |
அதிகாரப் பூர்வ பெயர் | சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் |
போக்குவரத்து | வாகனங்கள் |
தாண்டுவது | மலாக்கா நீரிணை |
பராமரிப்பு | ஜே.கே.செ.பி |
வடிவமைப்பாளர் | மலேசிய மத்திய அரசு சீன துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் யூ.இ.ஏம் குழு |
வடிவமைப்பு | கேபிள் பாதை பாலம் |
மொத்த நீளம் | 24 கிமீ |
கட்டியவர் | சீன துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் யூ. இ. ஏம் குழு |
திறப்பு நாள் | மார்ச் 1 , 2014 |
கண்ணோட்டம்
பினாங்கு இரண்டாவது பாலம் ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு உயர் தாக்கத் திட்டம் ஆகும். ஒரு உயர் தாக்கத் திட்டமாக இருப்பதால், மலேசியாவின் வடக்கு நடைபாதை பொருளாதார பகுதியின் (NCER) சமூக பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
வரலாறு
திட்டமிடல்
ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டில், மலேசிய மத்திய அரசு ஒன்பதாவது மலேசிய திட்டதின்கீழ் பினாங்கு இரண்டாவது பாலம் கட்ட ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 12, 2006 அன்று, புதிய பினாங்கு இரண்டாவது பாலத்துக்கு முன்மாதிரி விழா ஐந்தாவது மலேசிய பிரதம மந்திரி அப்துல்லா அகமது படாவியால் நிகழ்த்தப்பட்டது.
கட்டுமானம்
மண் ஆய்வுப் பணி மற்றும் சோதனைத் தொகுப்பு வேலைகளை முடித்த பின்பு சீனத் துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் மற்றும் யூ. இ. ஏம் குழு பாலம் கட்டும் பணி 2011 இல் நிறைவடையும் என்று அறிவித்தது. கட்டுமானப் பணி 2008 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 2008 இல், அரசாங்கம் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தல், வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் கட்டிட பொருட்கள் உயரும் செலவினங்கள் காரணமாக ஒன்பது மாதங்கள் தாமதமாகும் என அறிவித்தது. நவம்பர் 8, 2008 அன்று, சீனத் துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் மூலம் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டுமானம் இறுதியாக தொடங்கியது. அக்டோபர் 3, 2012 அன்று, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான செப்டம்பர் 2013 க்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே இப்பாலக் கட்டுமானப் பணி முடிவடையுமென ஊடகங்களில் அறிக்கைகள் வெளியானது. ஏப்ரல் 20, 2013 அன்று, கேபிள் இறுதி மூடல் முடிக்கப்பட்டது. இதனால் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்தது. ஏப்ரல் 30, 2013 அன்று, ஆறாவது பிரதமர் நஜிப் துன் ரசாக் கோலப்புறையில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக தீவுப்பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குச் செல்ல பாலத்தில் 24 கி.மீ. தொலைவு சென்று இப்பாலத்தைப் பயன்படுத்திய நாட்டின் முதல் தலைவர் ஆனார். பாலம் முதலில் நவம்பர் 8, 2013 அன்று திறப்பதற்குத் திட்டமிடப்பட்டது. எனினும் திறப்புத் தேதி, மார்ச் 1 ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
பாலம் திறப்பு விழா
பினாங்கு இரண்டாவது பாலம் திறப்பு விழா மார்ச் 1, 2014 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு உத்தியோகபூர்வமாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் திறந்து வைக்கப்பட்டது. நஜிப் துன் ரசாக் பினாங்கு இரண்டாவது பாலத்திற்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் என்று பெயர் சூட்டினார், பாலம் திறப்பு விழா முடிந்த பிறகு 12:01 மணிக்கு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது .
தொழில்நுட்ப குறிப்புகள்
பாலம்
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் உயர் தணித்த இயற்கை ரப்பர் (HDNR) தாங்கி கொண்டு, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாங்கும் பாலமாகச் செயல்படுகிறது.
விவரக் குறிப்பீடு
- ஒட்டுமொத்த நீளம் : 24 கி.மீ
- நீளம் தண்ணீர் மீது : 16.9 கி.மீ.
- முதன்மை இடைவெளி : 250 மீ
- தண்ணீர் மேலே உயரம் : 30 மீ
- வாகனம் பாதைகள் எண்ணிக்கை : 2 ( ஒவ்வொரு திசையில் )
- பொது திறக்கப்படும் இலக்கு தேதி: 2014 மார்ச் 2
- ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்
- பாலம் உத்தேச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்