சாராள்

சாராள் அல்லது சாராய் (/ˈsɛərə/;[1] எபிரேயம்: שָׂרָה, தற்கால Sara திபேரியம் Śārā ISO 259-3 Śarra; இலத்தீன்: Sara; அரபு: سارة Sārah;) இந்தி: सराह Sāraha;) என்பவர் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாமின் மனைவியும் மற்றும் ஈசாக்குவின் தாயும் ஆவார். மேலும் இவரைப் பற்றி பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் முதலில் சராய் என அழைக்கப்பட்டது. பின்னர் ஆதியாகமம் 17:15 கணக்கின்படி, கடவுளின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சாராய் என்னும் தனது பெயரை சாராள் என மாற்றினார்.[2]

சாரா அல்லது சாராள்
(Sarah) or (Saral)
ஆபிரகாம் தன் மனைவி சாராளுடன் நிற்கும் ஒரு ஓவியப்படம்.
முதல் முதுபெரும் தாய், இஸ்ரயேல் மக்களின்முதுபெரும் தாய், குடும்பத் தலைவி,
பிறப்புமெசொப்பொத்தேமியா
இறப்புகானான்
பெற்றோர்தேராகு
வாழ்க்கைத் துணைவர்ஆபிரகாம்
பிள்ளைகள்ஈசாக்கு
இஸ்மவேல் (ஒன்றுவிட்ட மகன்)
ஏற்கும் சபை/சமயம்இசுலாம்
யூதம்
கிறித்தவம்
மண்டனிசம்
பகாய் சமயம்
செல்வாக்குச் செலுத்தியோர்ஆபிரகாம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்இவருடைய எல்லா வழித்தோன்றல்களும்

பெயர் விளக்கம்

எபிரேயப் பெயரான சாராள் (שָׂרָה/Sara/Śārā) என்பதற்கு உயர்நிலைப் பெண் எனக் குறிக்கிறது, மற்றும் இளவரசி அல்லது சீமாட்டி என தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[3]

வாழ்க்கைக் குறிப்பு

சராயிடம் ஆபிராம் ஆலோசனைக் கூறுவது போன்ற ஓவியம். (நீர்வர்ணம் ஓவியர்: சேம்சு டீச்சொட் மூலம் சுமார் 1896–1902 ஆம் ஆண்டு வரையப்பட்து.)

சாராள் ஆபிரகாமின் மனைவியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார், மேலும் தேராகு இவரது தந்தை ஆவார்.[4] மற்றும் சாராள் மிக அழகுள்ளவளும் தனது கணவர் ஆபிரகாமைவிட பத்து வயது இளமையானவாளும் ஆவார். மேலும் சாராளுக்கு தொண்ணூறு அகவையும், ஆபிரகாமுக்கு நூறு அகவையில் ஈசாக்கு என்னும் மகன் பிறந்தார். இவர் இவர்களுக்கு முதல் மகனாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் சாராளின் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த இஸ்மவேலும் ஆபிரகாமின் மகனாவார். சாராள் தனது நூற்றுயிருபத்தேழு ஆவது அகவையில் மரித்தார். பின்னர் சாரளின் பிரேதம் கானான் தேசத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையில் அடக்கம் செய்யப்பட்டது.

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[5]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனா
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.