காயின் மற்றும் ஆபேல்

காயின் மற்றும் ஆபேல் (எபிரேயம்: הֶבֶל ,קַיִן Qayin, Hevel)என்பவர்கள் ஆதியாகமத்தின் படி ஆதாம் மற்றும் ஏவாளின் பிள்ளைகள் ஆவார்கள்..[1][2] ஆதாமும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது. தேவனின் கட்டளையை மீறி ஞானபழத்தினை உண்ட காரணத்தினால் மனிதனாகப்பட்டவன். கடவுளினால் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தனது அன்றாட உணவிற்காக கடுமையாக உழைக்கும்படி கடவுளால் பணிக்கப்பட்டான். அதன் பின் ஆதியாகமத்தின் படிக்கு காயின் ஒரு விவசாயியாகவும் ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும் சித்தரிக்கப்படுகிறார். இந்த நூலின் படி தனது சகோதரனான ஆபேலை காயின் கொலை செய்தார். இதனால் மண்ணின் முதல் கொலையாளி காயின் ஆவார். முதன்முதலில் கொலையுண்ட மனிதன் ஆபேல் ஆவான். ஆதியாகமத்தில் இந்த கொலைக்கான காரணமாக எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால் காயின் தனது சகோதரனின் பால் கொண்ட பொறாமையே இந்த கொலைக்கான காரணம் என்று விமர்ச்சகர்கள் கருதுகிறனர்.

காயின் தனது சகோதரன் ஆபேலை கொலை செய்யும் காட்சி - சர் பீட்டர் பவுல் ரூபென்ஸ் வரைந்த ஓவியம்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காயின் சாத்தானின் வாரிசாக போனமையால் அவனுள் உறைந்த சாத்தானின் தன்மையே தனது சகோதரனை கொலை செய்யும்படி செய்தது என விளக்கங்கள் கூறப்பட்டு வருகிறன. மேடிவல் ஆர்ட் (Madival Art) எனப்படும் பழங்கால சித்தரிப்பு முறைகளின் வழியாக ஷேக்ஸ்பியர் காலந்த்தொட்டு இன்றுவரை இவ்வாறே இந்த காரணம் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. இசுலாமியர்களின் புனித நூலான குர்-ஆன்'லும் ஆதாமின் மக்களாக (Arabic: ابني آدم) காயின் மற்றும் ஆபேல் இருவரின் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்-ஆன்'இல் இவர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.