கூவம்

கூவம் , சென்னை நகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்று, அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகியவை மற்ற இரு ஆறுகள். ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 75 கி.மீ ஓடுகிறது. புறநகரில் 40 கிலோமீட்டரும், நகருக்குள் 18 கிலோமீட்டரும் ஓடுகிறது. 2004 டிசம்பர் சுனாமியின் போது இந்த ஆறு ஒரு வடிகாலாகச் செயல்பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது. சுனாமியின் போது ஆற்றின் கழிமுகப்பகுதியின் அசுத்தம் நீங்கியது.தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எப்போதும் கறுப்பாக தெரியும் தண்ணீர் கண்ணாடி போல் மின்னியது . ஆனால் சுனாமி முடிந்த சில வாரங்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பியது.

கூவம்
River
கூவம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
நகரம் சென்னை
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் கூவம் கிராமம், திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா
கழிமுகம் கூவம் வடிநிலம்
 - elevation 0 அடி (0 மீ)
நீளம் 40 மைல் (64 கிமீ)

தோற்றம்

கூவம் ஆறு சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர்.[1] மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுரகிலோமீட்டர். ஆற்றுப் படுக்கையின் அகலம் 40 முதல் 120 மீட்டர் வரை. ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு நொடிக்கு 22,000 கன அடி ஆகும். 2005 ஆண்டில் ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 21,500 கன அடி.[2]

மேற்கோள்கள்

  1. நீர்நிலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்: சென்னையில் நடந்தது
  2. ஓடும் நீரின் வேரை அறித்த வேதனை வரலாறு கட்டுரை, தி இந்து 7.திசம்பர் 2015

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.