சென்னை புத்தகக் காட்சி
சென்னை புத்தகக் காட்சி (Chennai Book Fair அல்லது Madras Book Fair) சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் ஓரு நூல் கண்காட்சியாகும். இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு - பொங்கல் காலத்தில், திசம்பர் கடைசி வாரத்திலிருந்து சனவரி மூன்றாம் வாரத்திற்குள், பத்து நாட்கள் நடைபெறும்.[1] இக்கண்காட்சி சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2]
சென்னை புத்தகக் காட்சி | |
---|---|
புத்தகக் கண்காட்சியின் நுழைவாயில் | |
நிகழ்நிலை | செயல்பாட்டில் உள்ளது |
நிகழிடம் | ஒய்.எம்.சி.ஏ. மைதானம் |
அமைவிடம் | நந்தனம், சென்னை |
நாடு | இந்தியா |
முதல் நிகழ்வு | திசம்பர் 14, 1977 |
வந்தோர் எண்ணிக்கை | 600,000 ( 2007-இல்) |
இணையத்தளம் | bapasi.com |
வரலாறு
முதல் "சென்னை புத்தகக் காட்சி", தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் திசம்பர் 14 முதல் திசம்பர் 24 வரை 1977-இல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு, முக்கியமாக சென்னை, மற்றும் தென்னிந்தியாவின் பல முக்கியமான பதிப்பகங்களின் சங்கமே தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகும்.[3][4][5] முதல் கண்காட்சியில் 22 கடைகள் போடப்பட்டிருந்தன; மதரசா-இ-ஆசாம் பள்ளியில் நடத்தப்பட்டது. பி.ஐ. பதிப்பகத்தின் கே வி மாத்தியூ அவர்களின் முன்னெடுப்பில் முதல் ஆறு புத்தகக் காட்சிகள் பெரும் வெற்றி பெற்றன; அவர்தம் முயற்சியில் ஆரம்ப காலங்களில் புத்தகக் காட்சி பெரும் வளர்ச்சி பெற்றது. மேலும், மாணவ/மாணவியருக்கான புத்தகக் கண்காட்சியையும் அவர் தொடங்கினார். ஆயினும், சென்னை புத்தகக் காட்சியைப் போல மாணவ/மாணவியருக்கான புத்தகக் கண்காட்சி வெற்றியைப் பெறவில்லை.
மதரசா-இ-ஆசாம் பள்ளியில் முதல் நான்கு புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்ட பிறகு, 1981-ஆம் ஆண்டு இராயப்பேட்டை, சென்னை - இல் இருக்கும் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (ஒய்.எம்.சி.ஏ.) மைதானத்தில் நடத்தப்பட்டது. 1982-இல் செலுத்தி-சென்று உணவருந்தும் நிலையத்தில் (Drive-in Restaurant) நடத்தப்பட்டது. புத்தகக் காட்சியின் புகழ் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருந்தது. திசம்பர் 22, 1989, முதல் சனவரி 1, 1990, வரை நடத்தப்பட்ட 12-வது புத்தகக் காட்சியில் உலக சுகாதார அமைப்பின் புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருந்தன.[6] சென்னை புத்தகக் காட்சியின் பெருவெற்றியின் காரணத்தினால், உதகமண்டலம், திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் "தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால்" புத்தகக் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்ப காலங்களில் கிறித்துமசு-புத்தாண்டு விடுமுறைகளுடன் ஒத்துப்போகுமாறு திசம்பர் இறுதி வாரங்களிலிருந்து சனவரியின் ஆரம்ப வாரம் வரை புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. ஆயினும், 90-களில் பொங்கல் விடுமுறைகளுடன் ஒத்திருக்கும்படி சனவரியின் மையப் பகுதிகளில் நிகழுமாறு மாற்றப்பட்டது.
பங்கு கொள்ளும் பதிப்பகங்கள்
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நூல் கண்காட்சிகளில் மிகப்பெரும் கண்காட்சிகளில் ஒன்றாக இக்கண்காட்சி விளங்குகிறது. நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்தும் பன்மொழிப் பதிப்பகங்களும், தமிழ்நாட்டின் முக்கியமான சில தமிழ்ப் பதிப்பகங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் பதிப்பகங்கள்
இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் தமிழ்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
- த அல்லயன்சு
- பாரி நிலையம்
- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- வானதி பதிப்பகம்
- மணிவாசகர் பதிப்பகம்
- பிரேமா பிரசுரம்
- நர்மதா பதிப்பகம்
- நக்கீரன் பதிப்பகம்
- சுரா புக்சு
- கவிதா பதிப்பகம்
- உமா பதிப்பகம்
- தமிழ் புத்தகாலயம்
- பூங்கொடி பதிப்பகம்,
- காலச்சுவடு
- கிழக்கு பதிப்பகம்
- உயிர்மை
- பாரதி புத்தகாலயம்
- ஐந்திணை பதிப்பகம்
- கண்ணதாசன் பதிப்பகம்
- அருணோதயம்
- பழனியப்பா பப்ளிகேசன்சு
- சிறீ செண்பகா பதிப்பகம்
- பெரியார் சுயமரியாதை
- சிறீ இராமகிருட்டிணா மடம்,
- இசுகான்
- திருமகள் நிலையம்
- தாமரை நூலகம்
- யூனிவெர்சல் பப்ளிசர்சு
- கபிலன் பதிப்பகம்
பன்மொழிப் பதிப்பகங்கள்
இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் பன்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்களில் முக்கியமானவையாக உள்ளன.
- ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக அச்சகம்
- கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சகம்
- புஸ்தக் மகால்
- இக்கின்பாதம்சு
- ஓரியண்ட் லாங்மேன்சு
- மாக்மில்லன் பதிப்பகம்
- டாடா-மெக்ராஹில்
- இந்தியா புக் அவுசு
- பிரிட்டிஷ் கௌன்சில்
- த இந்து
சிறப்பியல்புகள்
சென்னை புத்தகக் காட்சியானது சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2] புத்தகக் கடைகளைத் தவிர்த்து உணவு மற்றும் இளைப்பாறுதலுக்கான கடைகளும் கண்காட்சியரங்கில் உண்டு. விவாதங்கள், போட்டிகள் மற்றும் முக்கிய நபர்களின் உரைகளும் அரங்கில் நடைபெறும். சமீப காலங்களில், உலகத் திரைப்படங்களின் குறு-காணொலிகளும் காண்பிக்கப்படுகின்றன. சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பதிப்பகத்தார் ஆகிய விருதுகளும் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படுகின்றன.[7]
கண்காட்சிகள்
- 2015ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி 2015 சென்னையில் சனவரி 9-21 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
- 2014ஆம் ஆண்டு 37-வது புத்தகக் காட்சி சென்னையில் சனவரி 10-22 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.[8]
- 2012-ஆம் ஆண்டு 35-வது புத்தகக் காட்சியும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனவரி 5 முதல் 17 வரை நடைபெற்றது.
- 2011ஆம் ஆண்டு 34வது புத்தகக் காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே செயிண்ட் ஜோர்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 666 காட்சிக்கூடங்களுடன் சனவரி 4-17 தேதிகளில் நடைபெற்றது.[9]
- ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் சென்னை மெட்ரோ திட்டப் பணிகளின் காரணமாக 36-வது புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனவரி 11 முதல் 23 வரை நடைபெற்றது. 1,80,000 சதுர அடிகளில் 747 கடைகளுடன் 10 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கண்காட்சியில் விற்பனைக்கு இடம்பெற்றன.[10][11]
வருடம் | பதிப்பு | இடம் | கடைகளின் எண்ணிக்கை | பார்வையாளர்கள் | நடைபெற்ற நாட்கள் | வருமானம் |
---|---|---|---|---|---|---|
2001 | 24 | காயித்-ஏ-மில்லத் பெண்கள் கல்லூரி | 11 நாட்கள் | |||
2002 | 25 | காயித்-ஏ-மில்லத் பெண்கள் கல்லூரி | 15 நாட்கள் | |||
2003 | 26 | காயித்-ஏ-மில்லத் பெண்கள் கல்லூரி | 272 | 300,000 | 9–19 ஜனவரி
(11 நாட்கள்) |
ரூ.6 கோடி |
2004 | 27 | காயித்-ஏ-மில்லத் பெண்கள் கல்லூரி | 310 | 540,000 | 9–19 ஜனவரி
(11 நாட்கள்) |
|
2005 | 28 | காயித்-ஏ-மில்லத் பெண்கள் கல்லூரி | 700,000 | 7–17 ஜனவரி
(11 நாட்கள்) |
ரூ.6 கோடி | |
2006 | 29 | காயித்-ஏ-மில்லத் பெண்கள் கல்லூரி | 375 | 6–16 ஜனவரி
(11 நாட்கள்) |
||
2007 | 30 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | 474 | 600,000 | ||
2008 | 31 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | ||||
2009 | 32 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | 600 | 1,000,000 | 8–17 ஜனவரி
(10 நாட்கள்) |
ரூ.7 கோடி |
2011 | 34 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | 646 | |||
2012 | 35 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | 687 | 5–17 ஜனவரி
(13 நாட்கள்) |
||
2013 | 36 | நந்தனம் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு மைதானம் | 746 | 900,000 | 11–23 ஜனவரி
(13 நாட்கள்) |
ரூ.12 கோடி |
2014 | 37 | நந்தனம் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு மைதானம் | 777 | 10–22 ஜனவரி
(13 நாட்கள்) |
||
2015 | 38 | நந்தனம் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு மைதானம் | 700 | 9–21 ஜனவரி
(13 நாட்கள்) |
||
2016 | 39 | தீவுத்திடல், சென்னை | 700 | 1–13 ஜூன்
(13 நாட்கள்) |
||
2017 | 40 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | 700 | 6–19 ஜனவரி
(13 நாட்கள்) |
||
2018 | 41 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்பாக்கம் | 708 | 10–22 ஜனவரி
(13 நாட்கள்) |
||
2019 | 42 | நந்தனம் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு மைதானம் | 4-20 ஜனவரி
(17 நாட்கள்) |
இதையும் காண்க
மேற்கோள்கள்
- Kamath, Rina (2000). Chennai. Orient Blackswan. பக். 105. ISBN 8125013784, ISBN 9788125013785.
- Krishnamachari, Suganthy (January 17, 2002). "Volumes of wisdom and fun too". தி இந்து (Chennai, India). http://www.hindu.com/thehindu/mp/2002/01/17/stories/2002011700210400.htm.
- "25th Chennai Book Fair 2002". உலக சுகாதார அமைப்பு. மூல முகவரியிலிருந்து 2012-12-12 அன்று பரணிடப்பட்டது.
- "Films, fun and contests for kids at annual book fair". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. January 7, 2009. http://articles.timesofindia.indiatimes.com/2009-01-07/chennai/28056598_1_fair-venue-bapasi-gandhi-kannadasan.
- Muthiah, S. (November 8, 2004). "60 years midst books". The Hindu (Chennai, India). http://www.hindu.com/mp/2004/11/08/stories/2004110800230300.htm.
- "Health Literature and Literary Services". WHO repository 5. World Health Organization.
- "Book extravaganza kicks off". தி இந்து (Chennai, India). January 8, 2005. http://www.hindu.com/2005/01/08/stories/2005010813910300.htm.
- சென்னை புத்தகக்
- 1 கோடிக்கும் அதிகமான நூல்கள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது - தினகரன்
- BAPASI release
- "Book fair expected to draw 10 lakh visitors". The Hindu (Chennai: The Hindu). 10 January 2013. http://www.thehindu.com/news/cities/chennai/book-fair-expected-to-draw-10-lakh-visitors/article4291492.ece. பார்த்த நாள்: 10 Jan 2013.
உசாத்துணைகள்
- "History of BAPASI". BAPASI.