கொலவை ஏரி

செங்கல்பட்டு கொலவை ஏரி (Kolavai Lake) செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

கொலவை ஏரி
செங்கல்பட்டு கொலவை ஏரி
அமைவிடம்செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12.708°N 12.708°E / 12.708; 12.708

அமைவிடம்

கொலவை ஏரியின் காலை நேர ரம்மியமான தோற்றம்

இந்த ஏரியானது சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சாலையில் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 1 மணி நேரத்தில் பேருந்தில் செல்லலாம்.

போக்குவரத்து

இதன் அருகில் பரனூர் மற்றும் செங்கல்பட்டு தொடர் வண்டி நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் வழியாக தென்தமிழகத்திற்கு செல்லும் தொடருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன.

நிலை

எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இவ்வேரி தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருவதாலும், பலர் இதன் அருகில் தொழிற்சாலைகளைக் கட்டுவதாலும் ஆகும்.

பயன்பாடு

சென்னையில் கோடைக் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

சுற்றுலாத்தலம்

ஒரு சுற்றுலாத் தலமாக இந்த ஏரி விளங்குகிறது.

மேற்கோள்கள்

  1. "செங்கல்பட்டு கொலவை ஏரி". தினமணி (செப்டம்பர் 24, 2013)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.