ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (வழி NH7) கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி
அமைவிடம்தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறு12°07′09″N 77°46′26″E
ஏற்றம்700 மீ
நீளமான வீழ்ச்சியின் உயரம்20 மீ

ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.

பெயர் வரலாறு

தலைநீர்

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.[1]

உகுநீர்க்கல்

ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட சேமன் சண்டை என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன் எனப் பாடும் சாமியாரைப் பார்த்து ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர். 1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு உகுநீர்க்கல் உயிர்காவிரி எனத் தரப்பட்டுள்ளது.

உகுநீர்க்கல் உயிர்காவேரி
மிகுதானியம் தகவாய்வினை
பகுத்துண்பவர் எவராயினும்
மிகுநீர் அருள் மகவாய்க்கொள் கொளினே
உயிராய்ப் போற்றுவர் உயர்பண் பாடுவர்
தூயர்நீர் தெய்வத் தாய்நீ எனவே

என்பது இத்தலைப்பிலுள்ள முதற்பாடல். உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்து விட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. [2] பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

பரிசல்

ஒகேனக்கல் காட்சிக்கூடம்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

அடிக்குறிப்பு

  1. உண் துறை
    மலை அலர் அணியும் தலை நீர் நாடன் (புறநானூறு 390)
  2. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட கருத்தரங்க மலர் 10.11.2009 பக்கம்54
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.