காவிரிப்பூம்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.

  • சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்:
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [1]
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [2]
பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்

பெயர் வரலாறு

காவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்
  • காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் > காவிரிப்பூம்பட்டினம்
  • ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்' என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)

கடற்கோள்

மணிமேகலை வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்துகொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது. ( இன்றைய காலத்தில் சுனாமி) அப்போது பௌத்த துறவி அறவண அடிகள், பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த மாதவி முதலானோர் தப்பிப் பிழைத்து, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர். [3]

சங்ககால நிலை

பட்டினப்பாலை கூறும் செய்திகள்

  • வளம் நிறைந்த தெருக்கள் - கடல் வழியே வந்த சவாரிக் குதிரைகள், வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் பிறந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரி-வெளி விளைச்சல்கள், ஈழத்து உணவு,[4] காழகத்து ஆக்கம் [5] முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக்கிடந்தன.

சங்கப்பாடல் தரும் செய்திகள்

புலவர்கள்

அரசு

சிலப்பதிகாரம், மணிமேகலை தரும் செய்திகள்

கடற்கோள்

காண்க. நாகநாடு

அடிக்குறிப்பு

  1. அடி 146-163
  2. அடி 311-345
  3. மாநகர் கடல்கொள
    அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
    இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும் (மணிமேகலை 28 அடி 80-81)
  4. ஈழத்து உணவு என்பது யாது?
    • அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் கரும்பைத் தமிழ்நாட்டுக்குப் கொண்டுவந்தனர் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.
    அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீரக இருக்கை ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர் (புறம் 99) கரும்பு நியூகினியா தேயத்தில் கி.மு. 6000 ஆண்டுக்கு முந்தியது என்பது அதன் வரலாறு. கரும்பு அது ஈழநாட்டின் வழியே தமிழகம் வந்திருக்கலாம். *இதனையே பட்டினப்பாலை நூல் ‘ஈழத்து உணவு’ எனக் குறிப்பிடுகிறது என எண்ணிப் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இவை சர்க்கரைக்கட்டியால் செய்த தின்பண்டங்கள் போலும்.
    • தமிழ்நாட்டின் சங்ககால விளைச்சலில் நெல்லும் பரும்பும் முதன்மை பெற்றிருந்த்தைச் சங்கப்பாடல்கள் பல தெரிவிக்கின்றன. கரும்பு நடு பாத்தி (குறுந்தொகை 262, ஐங்குறுநூறு 65). பனைவெல்லத்தில் செய்த வெல்லத்தைத் தொல்காப்பியம் ‘பனாஅட்டு’ எனக் குறிப்பிடுகிறது. பனையின் முன்னர், அட்டு வரு காலை,
    நிலை இன்று ஆகும், ஐ என் உயிரே; ஆகாரம் வருதல் ஆவயினான. தொல்காப்பியம், 285 உயிர்மயங்கியல்.
  5. பர்மா தேக்கு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.