சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார். [1] இவனது இறுதிக் காலம் இலவந்திகைப்பள்ளி என்னுமிடத்தில் நிறைவுற்றது.

  • இவன் வேல் தாங்கித் தேரேறிப் போருக்குச் செல்வது வழக்கம். [2]
  • இவனைத் தாக்கியவர் வாழக் கண்டதும், அடி தொழுதவர் வருந்தக் கண்டதும் இல்லையாம்.
  • நெல்வயலில் களையெடுக்கும் உழத்தியர் சிறந்த ஆம்பல் [3], நெய்தல் பூக்களைக் களைந்து எறிவார்களாம்.
  • உழவர் விலாப் புடைக்க புதுநெல் சோறு தின்றுவிட்டு நெல்கட்டுகளைச் சுமந்து செல்லும்போது நடை தடுமாறுவார்களாம்.
  • உழவரின் சிறுவர்கள் வைக்கோல் போரில் ஏறி இளநீரையும், நுங்கையும் பறித்து விளையாடுவார்களாம்.

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 61
  2. எஃகு விளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
  3. மலர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.