ஓ. என். வி. குறுப்பு

ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு (மலையாளம்: ഒറ്റപ്ലാവില്‍ നീലകണ്ഠന്‍ വേലു കുറുപ്പ്, 27 மே 1931 – 13 பெப்ரவரி 2016[1]) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர். 2007ஆம் ஆண்டுக்கான உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருது பெற்றவர் [2]. 20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாதெமி விருது, சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.2007ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

ஓ. என். வி. குறுப்பு
முனைவர். மரு. ஓ. என். வி. குரூப்
பிறப்புமே 27, 1931 (1931-05-27)
சாவரா, கொல்லம், கேரளா
இறப்பு13 பெப்ரவரி 2016
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
கல்விமுதுகலைப் பட்டம்
பணிபுலவர், பாடலாசிரியர், முனைவர்
பெற்றோர்ஓ. என். கிருஷ்ண குறுப்பு, கே. இலட்சுமிகுட்டி அம்மா
வாழ்க்கைத்
துணை
சரோஜினி
பிள்ளைகள்ராஜீவன், மாயாதேவி

ஓ.என்.வி என்று பரவலாக அறியப்படும் இவர் இடதுசாரி சிந்தனையாளர்[3] . 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் இடது சனநாயக முன்னணியின் சார்பாகப் போட்டியிட்டார்.[4]

ஆக்கங்கள்

கவிதைகள்

  • பொருதுன்ன ஸௌந்தர்யம்
  • சமரத்தின்றெ சந்ததிகள்
  • ஞான் நின்னெ சினேகிக்குன்னு
  • மாற்றுவின் சட்டங்ஙளெ
  • தாஹிக்குன்ன பானபாத்ரம்
  • ஒரு தேவதயும் ரண்டு சக்ரவர்த்திமாரும்‍
  • கானமால‍
  • நீலக்கண்ணுகள்
  • மயில்ப்பீலி
  • அட்சரம்
  • ஒரு துள்ளி வெளிச்சம்
  • கறுத்த பட்சியுடெ பாட்டு
  • காரல் மார்க்சின்றெ கவிதகள்
  • ஞான் அக்னி
  • அரிவாளும் ராக்குயிலும்‍
  • அக்னிசலபங்ஙள்
  • பூமிக்கு ஒரு சரமகீதம்
  • மிருகய
  • வெறுதெ
  • உப்பு
  • பராஹ்னம்
  • பைரவன்றெ துடி
  • சார்ங்ககப்பட்சிகள்
  • உஜ்ஜயினி
  • மருபூமி
  • நாலுமணிப்பூக்கள்
  • தோன்னியாட்சரங்ஙள்
  • நறுமொழி‍
  • வளப்பொட்டுகள்‍
  • ஈ புராதன கின்னரம்‍
  • சினேகிச்சு தீராத்தவர் ‍
  • சுவயம்வரம்‍
  • பாதேயம்‍
  • அர்த்தவிராமகள்‍
  • தினாந்தம்

திரைப்படப் பாடல்கள்

  • ஆரெயும் பாவ காயகனாக்கும்...
  • ஆத்மாவில் முட்டி விளிச்சது போலெ...
  • ஒரு தலம் மாத்ரம் விடர்ந்நொரு....
  • சியாம சுந்தர புஷ்பமே.....[5]
  • சாகரங்ஙளே....
  • நீராடுவான் நிளயில்....
  • மஞ்ஞள் பிரசாதவும் நெற்றியில் சார்த்தி....
  • சரதிந்துமலர் தீப நாளம் நீட்டி...
  • ஓர்மகளே கைவள சார்த்தி.........
  • அரிகில் நீயுண்டாயிருந்நெங்கில்...........[6]
  • வாதில் பழுதில் ஊடென் முன்னில்.....
  • ஆதியுஷ சந்திய பூத்தது இவிடெ...

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.