புனத்தில் குஞ்ஞப்துல்லா
மலையாள நவீன இலக்கியவாதிகளில் முக்கியமானவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆவார். 1940 ல் கேரளத்தில் வடகர ஊரில் பிறந்தார். அலிகட் பல்கலையில் மருத்துவர் பட்டம் பெற்றார். 1980இல் இவரது முதல் நாவலான ஸ்மாரக சிலகள் சாகித்ய அகாதமி விருதுபெற்றது. அதன்பின் புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தின் முக்கியமான இலக்கியவாதியாக அறியப்ப்பட்டார்.
படைப்புகள்
- ஸ்மாரகசிலகள்
- மருந்து
- பரலோகம்
- புனத்திலிண்டே நாவலுகள்
- கன்யாவனங்ஙள்
- நவகிரஹங்ஙளுடே தடவற
- நஷ்ட ஜாதகம் (சுயசரிதை)
மொழி பெயர்ப்புகள்
- மீசான் கற்கள் (குளச்சல் மு. யூசுப்) காலச்சுவடு பிரசுரம்
- மஷ்ஹர் பெருவெளி (குளச்சல் மு. யூசுப்) காலச்சுவடு பிரசுரம்
- மருந்து (சு. ராமன்) உயிர்மை பதிப்பகம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.