ஈத்தைல் பார்மேட்டு

ஈத்தைல் பார்மேட்டு (ethyl formate) என்பது ஒரு கார்பாக்சிலிக் அமிலமான பார்மிக் அமிலம் ஒரு எத்தனால் என்ற ஆல்ககாலுடன் வினைபுரிந்து உருவாகும் எசுத்தர் ஆகும். பார்மிக் அமிலமும் மெத்தனோயேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுவதால் இச்சேர்மம் எத்தில் மெத்தனோயேட்டு என்று அழைக்கப்படுகிறது. ரம் என்று சொல்லப்படும் மதுபான வகையின் மணம் மற்றும் ராசுபெரி பழத்தின் நறுமணத்தில் சிறிதளவு ஈத்தைல் பார்மேட்டு உண்டு.[1] எறும்புகளின் உடலில் இருந்தும் தேனீக்களின் கொட்டும் குழலிலும் இது தோன்றுகிறது.[2]

ஈத்தைல் பார்மேட்டு
Ethyl methanoate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈத்தைல் பார்மேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தில் மெத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
109-94-4 Y
ChEBI CHEBI:52342 Y
ChEMBL ChEMBL44215 Y
ChemSpider 7734 Y
யேமல் -3D படிமங்கள் Image
UNII 0K3E2L5553 Y
பண்புகள்
C3H6O2
வாய்ப்பாட்டு எடை 74.08 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் பழச்சுவை
அடர்த்தி 0.917 கி/செ3
உருகுநிலை
கொதிநிலை 54.0 °C (129.2 °F; 327.1 K)
9% (17.78°C)
ஆவியமுக்கம் 200 மி.மீ பாதரசம் (20°செ)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

பயன்பாடு

எத்தில் மெத்தனோயேட்டை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பொதுவாக பாதுகாப்பானது என்று அறிவித்துள்ளது.[3] ஆனால் அமெரிக்கத் தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், கண்கள், தோல், சளிச்சவ்வு மற்றும் மனிதர், விலங்குகளின் சுவாசக்குழாய்களில் எத்தில் மெத்தனோயேட்டு எரிச்சலை உண்டாக்கும் என்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளது.[4] தொழிற்சாலைகளில் செல்லுலோசு நைட்ரேட்டு, செல்லுலோசு அசிட்டேட்டு, எண்ணெய்கள் மற்றும் கொழுப்புப்பசை முதலியவற்றை கரைப்பதற்கு கரைப்பானாக ஈத்தைல் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது. அசிட்டோனுக்கு மாற்றாகவும் இதை உபயோகிக்க முடியும். இதைத்தவிர தொழிலாளர்கள் ஈத்தைல் பார்மேட்டை கீழ்கண்டவாறு பலவாறாகப் பயன்படுத்துகின்றனர்:[4]

  • மெருகு தெளிப்பு, தூரிகைத் தீட்டல் போன்ற சமயங்களில் ஈத்தைல் பார்மேட்டைப் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு கண்ணாடி உற்பத்தி செய்யும் போதும் இதை உபயோகிக்கிறார்கள்.
  • புகையிலை , தானியங்கள், மற்றும் உலர்ந்த பழங்களை பதப்படுத்தும் முறையான புகையூட்டத்திற்குப் பயனாகும் மீதைல் புரோமைடிற்கு மாற்றாக இதைப் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத்துறையின் நோய்த் தடுப்புத் திட்டம் பரிந்துரைக்கிறது[3]).
  • தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள சராசரி நச்சு வெளிப்பாட்டு வரம்பு எட்டுமணி நேரத்தில் ஒரு கனமீட்டருக்கு 300 மில்லிகிராம் ஆகும். அமெரிக்க தேசிய தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவணமும் இதே அளவையே அனுமதிக்கத்தக்க அளவு என்று கூறுகிறது[5]

விண்வெளியில்

பால்வெளியில் உள்ள சாகிடாரியசு பி2 எனப்படும் தனுசு பி2 பகுதியின் மேகக்கூட்டத்தில் ஈத்தைல் பார்மேட்டை வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். செருமனியில் உள்ள மாக்சு பிளாங்க் ரேடியோ வானியல் நிறுவனத்தினர், எசுப்பானியாவின் 30 மீட்டர் வானொலித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி புதிய விண்மீனுக்கு அருகில் உள்ள வெப்பப் பகுதிகளில் இருந்து உமிழப்படும் கதிர்வீச்சு நிறமாலை பற்றி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் அங்கு ஈத்தைல் பார்மேட்டின் 50 மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன.[1]

மேற்கோள்கள்

  1. Sample, Ian (21 April 2009). "Galaxy's centre tastes of raspberries and smells of rum, say astronomers". தி கார்டியன். http://www.guardian.co.uk/science/2009/apr/21/space-raspberries-amino-acids-astrobiology. பார்த்த நாள்: 2009-04-21.
  2. http://www.chemicalland21.com/industrialchem/organic/ETHYL%20FORMATE.htm
  3. "Alternative fumigants: Ethyl Formate". University of California. பார்த்த நாள் 2009-04-25.
  4. "Occupational Safety and Health Guideline for Ethyl Formate". Occupational Safety and Health Administration. பார்த்த நாள் 2009-04-25.
  5. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.